AR Rahman: 'Fire அந்த மாதிரி' படம் தான்... ஆனால், இதற்காக தான் இசையமைத்தேன்... ஏஆர் ரஹ்மான் ஓபன்
சென்னை: இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். ரோஜா படத்தில் அறிமுகமான ஏஆர் ரஹ்மான், பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று ஆஸ்கர் விருதுகளையும் வென்றுள்ளார்.
இந்நிலையில், 1996ம் ஆண்டு லெஸ்பியன் கதைக்களத்தில் வெளியான ஃபயர் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். தீபா மேத்தா இயக்கிய இந்தப் படத்திற்கு இசையமைத்தது குறித்து ஏஆர் ரஹ்மான் மனம் திறந்துள்ளார்.

Fire படத்திற்கு இசையமைத்தது குறித்து ஏஆர் ரஹ்மான்
ஏஆர் ரஹ்மான் இசையில் பொன்னியின் செல்வன் 2, மாமன்னன், அயலான் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என உலகம் முழுவதும் பிஸியாக வலம் வந்துகொண்டிருந்தார் ஏஆர் ரஹ்மான். ஆனால், சில வருடங்களாகவே தமிழ்ப் படங்களுக்கு மட்டுமே அதிகமாக இசையமைத்து வருகிறார்.
இசை மட்டுமில்லாமல் ஏஆர் ரஹ்மானின் பண்புகளும் ரசிகர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அவரது Spritual, அமைதியான குணம், சிம்பிளிசிட்டி உள்ளிட்ட லைஃப் ஸ்டைல் மூலம் ரசிகர்களுக்கு ரோல் மாடலாக வலம் வருகிறார். இந்நிலையில், 1996ம் ஆண்டு வெளியான Fire என்ற படத்திற்கு இசையமைத்திருந்தார். இது லெஸ்பியன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தீபா மேத்தா இயக்கிய இந்தப் படத்தில் நந்திதா தாஸ், ஷபானா ஆஸ்மி இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். திருமணமான இரண்டு பெண்களுக்கு இடையேயான ஓரினச் சேர்க்கை தான் ஃபயர் படத்தின் கதைக்களம். முக்கியமாக இந்தப் படம் வெளியான போது கடும் எதிர்ப்புகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இப்படியொரு படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தது இப்போதும் ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் ஏஆர் ரஹ்மான் மனம் திறந்துள்ளார். தனது தனிப்பட்ட நம்பிக்கைகளை ஒரு படத்தின் அரசியலில் இருந்து பிரித்து வைத்திருக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது ஒரு படம் முக்கியமான கருத்தை சொல்ல முயற்சிப்பதை தான் உணர்ந்துவிட்டால், அந்தப் படம் தனது மதிப்புகளுடன் ஒத்துப் போகாவிட்டாலும் இசையமைக்க முடியும் என்றுள்ளார்.
ஃபயர் படத்தை உதாரணமாக கூறியுள்ள ஏஆர் ரஹ்மான், அந்தப் படம் தனது மதிப்புகளுடன் ஒத்துப்போகவில்லை என்றாலும் இசையமைத்தேன் எனக் கூறியுள்ளார். பல்வேறு அனுபவங்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளதால் அது தனது உலகக் கண்ணோட்டத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் தான் உருவாக்கும் கலையில் அவை ஒருபோதும் தலையிடவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட விருப்பமாக நான் நிற்பது வேறு. ஃபயர் படத்திற்கு இசையமைத்த போதும் அதே நிலைப்பாடு தான். அது லெஸ்பியன் படமாக இருந்தாலும் எனது மதிப்புகள் அல்லது நிலைப்பாடுகளை குறைக்கவில்லை. இயக்குநர் தீபா மேத்தா ஏதோ முக்கியமான விஷயத்தைச் சொல்ல முயற்சிப்பதால் நான் அந்த திரைப்படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று உணர்ந்தேன். அதேபோல், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் கொலை செய்யும் காட்சிகள் உட்பட அனைத்தும் உள்ளன. ஆனால் அது வரலாறு, அதை உங்களால் மாற்ற முடியாது என்றும் ஏஆர் ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











