மதம் மாறும் போது எனக்கு எந்த அழுத்தமும் இல்லை.. தென்னிந்தியர்கள் மனசே பெருசு.. ஏ.ஆர். ரஹ்மான் பளிச்!

சென்னை: தென்னிந்தியர்கள் பெரிய மனது உடையவர்கள் என சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பேசியுள்ளார்.

இந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் 2, மாமன்னன் உள்ளிட்ட படங்களுக்கு சிறப்பான இசையை அமைத்துக் கொடுத்த ஏ.ஆர். ரஹ்மான் தொடர்ந்து சில பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

AR Rahman praising South Indians for their big heart and live and let live policy

சமூக வலைதளத்தில் அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் ஏ.ஆர். ரஹ்மான் தான் இஸ்லாமிய மதத்துக்கு மாறும் போது தனக்கு எந்தவொரு அழுத்தமும் வரவில்லை என பேசியுள்ளார்.

மாமன்னன் படத்தில் மிரட்டல் பிஜிஎம்: கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு, கோப்ரா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருந்த ஏ.ஆர். ரஹ்மான் இந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு வழக்கம் போல பிரம்மாண்ட இசையை அமைத்திருந்தார். நக நக பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அடுத்ததாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்காக இசையமைத்து இருந்தார். அந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை தரமாக இருந்தது. அதிலும், வடிவேலு பாடும் அந்த பாடலுக்காக நிச்சயம் ஏகப்பட்ட விருதுகள் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இந்த ஆண்டும் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

AR Rahman praising South Indians for their big heart and live and let live policy

தென்னிந்தியர்கள் மனசே பெருசு: மதச்சார்பற்ற நாடாக இந்தியா இருந்தாலும், அதனை அதிகமாக தென்னிந்தியாவில் தான் பார்க்க முடியும் என்கிற ரீதியில் தற்போது யூடியூப் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஏ.ஆர். ரஹ்மான் பேசியுள்ளார்.

இஸ்லாமிய மதத்துக்கு தான் மாறும் போது, தென்னிந்தியர்கள் தனக்கு எந்தவொரு அழுத்தத்தையும் கொடுக்கவில்லை என்றும், வாழு.. வாழவிடு என்பதை வலியுறுத்தியே அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் மனசு ரொம்பவே பெருந்தன்மை கொண்ட பெரிய மனசு என ஏ.ஆர். ரஹ்மான் புகழ்ந்து பேசியுள்ளார்.

AR Rahman praising South Indians for their big heart and live and let live policy

ஆனால், சமீப காலமாக அரசியல் சூழல் காரணமாக நாட்டில் நடக்கும் சில விஷயங்கள் வித்தியாசமாக இருப்பதாக உணர்வதாக அந்த பேட்டியில் ஏ.ஆர். ரஹ்மான் பேசிய உள்ள நிலையில், பாஜகவை தான் மறைமுகமாக சாடி பேசியிருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான் என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X