»   »  நயன்தாரா, விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய ஏஆர் ரஹ்மான்: விஜய் 62க்கு இசையமைக்கிறார்?

நயன்தாரா, விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய ஏஆர் ரஹ்மான்: விஜய் 62க்கு இசையமைக்கிறார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சிரஞ்சீவி படத்தில் இருந்து வெளியேறியுள்ள ஏ.ஆர். ரஹ்மான் விஜய் 62 படத்திற்கு இசையமைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

ராயலசீமாவை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு தெலுங்கில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நரசிம்ம ரெட்டியாக சிரஞ்சீவி நடித்து வருகிறார்.

சை ரா நரசிம்ம ரெட்டி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து ரஹ்மான் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

விலகல்

விலகல்

சிரஞ்சீவி ஒரு அருமையான நடிகர். அவர் மீது அதிக மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். இது ஒரு அழகான படம். ஆனால் எனக்கு பிற வேலைகள் உள்ளது.

பிசி

பிசி

நான் பல வேலைகளில் பிசியாக இருக்கிறேன். நான் என் படத்தை விளம்பரப்படுத்தும் வேலையிலும் ஈடுபட்டுள்ளேன். நான் பிசியாக இருப்பதால் சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகியுள்ளேன் என்றார் ரஹ்மான்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

சிரஞ்சீவியின் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கிச்சா சுதீப், விஜய் சேதுபதி, ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா தயாரிக்கிறார்.

ரஹ்மான்

ரஹ்மான்

ஏ.ஆர். முருகதாஸ், விஜய் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ள விஜய் 62 படத்திற்கு ரஹ்மான் இசையமைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. விஜய் படத்திற்கு அனிருத் இசையமைக்கக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் அனிருத் ரொம்பவே பிசியாக இருப்பதால் ரஹ்மானை தான் ஒப்பந்தம் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

English summary
AR Rahman has walked out of Chiranjeevi's movie Sye Raa Narasimha Reddy. Buzz is that Rahman may join Vijay 62 to be directed by AR Murugadoss. Rahman cited his busy schedule as the reason for saying NO to Chiranjeevi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil