திரையரங்கில் பொன்னி நதி பாடலை கொண்டாடிய பள்ளி மாணவர்கள்… ஏஆர் ரஹ்மான் கொடுத்த க்யூட் ரியாக்‌ஷன்

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளியான பொன்னியின் செல்வன், பாக்ஸ் ஆபிஸிலும் 500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற பொன்னி நதி பாடலுக்கு பள்ளி மாணவர்கள் செய்த அட்ராசிட்டியை பார்த்து, ஏஆர் ரஹ்மானும் க்யூட்டாக ரியாக்‌ஷன் கொடுத்துள்ளார்.

500 கோடி வசூல்

500 கோடி வசூல்

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளள. மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஷோபிதா துலிபலா உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. செப்டம்பர் 30ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் இன்றுவரை தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும், இதுவரை 450 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ள இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் விரைவில் 500 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஆர் ரஹ்மானின் இசை

ஏஆர் ரஹ்மானின் இசை

பொன்னியின் செல்வன் படத்தில் ஏஆர் ரஹ்மானின் இசையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக மணிரத்னமுடன் தரமான பாடல்களை கொடுத்து வரும் ஏஆர் ரஹ்மான், பொன்னியின் செல்வனுக்கும் பாடல்கள், பின்னணி இசையில் மாஸ் காட்டியுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் வெரைட்டியாக உருவாகியுள்ளன. அதேபோல், பின்னணி இசையிலும் வேறலெவலில் Goosebumps மொமண்ட் கொடுத்திருந்தார் ஆஸ்கர் நாயகன். பொன்னி நதி, சோழா சோழா, தேவராளான் ஆட்டம், ராட்சச மாமனே என அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.

பள்ளி மாணவர்கள் கொண்டாட்டம்

பள்ளி மாணவர்கள் கொண்டாட்டம்

பொன்னியின் செல்வன் இசைக்காக ஏஆர் ரஹ்மானுக்கு தேசிய விருது வென்றாலும் ஆச்சரியமில்லை என சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், இந்தப் படத்தில் இடம்பெற்ற பொன்னி நதி பாடலை பள்ளி மாணவர்கள் கொண்டாடித் தீர்த்துள்ளனர். முழுக்க முழுக்க பள்ளி மாணவர்களுக்காக மட்டும் பொன்னியின் செல்வன் ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது. அப்போது அரங்கு முழுவதும் நிரம்பியிருந்த பள்ளி மாணவர்கள், பொன்னி நதி பாடல் ஒலிக்கத் தொடங்கியதும் ரொம்பவே உற்சாகமாகினர். மேலும், அந்தப் பாடலை கோராஸாக பாடி ரொம்பவே கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

ஏஆர் ரஹ்மான் ரியாக்‌ஷன்

ஏஆர் ரஹ்மான் ரியாக்‌ஷன்

பொன்னி நதி பாடலை பள்ளி மாணவர்கள் கொண்டாடிய இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகின. மேலும், அந்த டிவிட்டர் பதிவில் ஏஆர் ரஹ்மானுக்கு நன்றி கூறியும் பதிவிடப்பட்டிருந்தது. அதற்கு க்யூட்டாக ரியாக்‌ஷன் கொடுத்துள்ள ஏஆர் ரஹ்மான், வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார். முன்னதாக, தீம் பார்க் ஒன்றின் Swimming Pool-லில் மக்கள் அனைவரும் குளித்துக் கொண்டிருக்கும் போது, பொன்னி நதி பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X