பிறந்த நாள் பரிசு.. சுமோ ட்ரைலர் வெளியிட்டார் ஏ.ஆர். ரஹ்மான் !
சென்னை: சிவாவின் பிறந்தநாள் அன்று சுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்டார் ஏ.ஆர். ரஹ்மான். இப்படம் ஒரு சிறந்த நகைச்சுவை கலந்த சென்டிமேன்ட் படமாக நிச்சயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'வணக்கம் சென்னை படத்தை தொடர்ந்து, மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் இணைந்து நடித்துள்ள படம் 'சுமோ' இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார்.

மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் தான் இந்த சுமோ. பல காட்சிகள் ஜப்பானில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.
குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரும் ரசிக்கக்கூடிய வகையில் இப்படம் அமைந்துள்ளது. நடிகர் சிவா முதல் முறையாக திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். தற்போது சுமோ படத்தின் ட்ரைலர் சிவாவின் பிறந்தநாளான்று வெளியாகி உள்ளது. ட்ரைலரை இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார்.
இந்தப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விடிவி கணேஷ் , யோகி பாபு நடித்திருக்கிறார்கள். ஹோசியின், ராஜிவ் மேனன் என மெகா கூட்டணியுடன் திரைக்கதையாளர்களை களமிறங்கி உள்ளார் சிவா. இவர்களது கூட்டணி வெற்றி பெற வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications











