எப்போ 2050-லேயா என கலாய்த்த இளைஞர்.. அதுக்கு ஏ.ஆர். ரஹ்மான் என்ன சொன்னாரு தெரியுமா?

சென்னை: சோனி மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து விரைவில் 99 சாங்ஸ் படத்தின் பாடல்கள் வெளியாகும் என்ற அறிவிப்பை ஏ.ஆர். ரஹ்மான் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அந்த ட்வீட்டை பார்த்து, ஏ.ஆர். ரஹ்மானை ரசிகர் ஒருவர், கலாய்க்க, அதற்கு கூலான ரிப்ளை கொடுத்துள்ளார் இசைப்புயல்.

விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் இசை காவியமாக உருவாகவுள்ள பாலிவுட் படமான 99 சாங்ஸ் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

எல்லாமே ரஹ்மான் தான்

எல்லாமே ரஹ்மான் தான்

ஏ.ஆர். ரஹ்மான் தயாரிப்பில், விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ஏகன் பாட், எடில்சி வர்காஸ் நடிப்பில் உருவாகி வரும் பாலிவுட் படம் 99 சாங்ஸ். காதல் காவியமாக உருவாகி உள்ள இந்த படத்தை தயாரித்து இசையமைத்து, திரைக்கதையையும் ரஹ்மான் இயக்குநருடன் இணைந்து எழுதியுள்ளார்.

சோனி நிறுவனத்துடன்

கடந்த ஆண்டே ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படம் இன்னமும் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது, சோனி மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து, உலகளவில் இந்த படத்தின் பாடல்களை விரைவில் வெளியிட உள்ளதாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரொம்ப சந்தோஷத்துடன் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார்.

2050லேயா?

ஏ.ஆர். ரஹ்மான் செம்ம ஹாப்பியாக ட்வீட் போட்ட அடுத்த நொடியே, ஒரு ரசிகர், எப்போ 2050லேயே என கலாய்த்து கமெண்ட் போட்டு ரஹ்மானை அப்செட் செய்துள்ளார். ஆனால், அதற்கு சற்றும் மனம் கலங்காமல், செம்ம கூலாக இன்றே என ரஹ்மான் பதில் கமெண்ட் போட, அந்த ரசிகர் வாயடைத்து போய், ஹார்ட்டீன்களை பதிவிட்டுள்ளார்.

குளோபல் வார்மிங்

குளோபல் வார்மிங்

உலகளவில் புவி வெப்பமயமாகுதல் பிரச்சனை நாளுக்கு நாள், பெருகிக் கொண்டே போகிறது. இது குறித்து உலக மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த ஏ.ஆர். ரஹ்மான் புதிய பாடல் தொகுப்பு ஒன்றை உருவாக்கப் போவதாக நேற்று திருச்சியில் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து, தனது படத்திற்கான வேலைகளையும் முடுக்கி உள்ளார்.

அடுத்தடுத்து

அடுத்தடுத்து

மேலும், ஏ.ஆர். ரஹ்மான் இசையில், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், விக்ரமின் கோப்ரா மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் என அடுத்தடுத்து தமிழ் படங்கள் ரிலீசாக உள்ளன. மேலும், பாலிவுட்டில் கரண் ஜோஹர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தக்த் படத்திற்கும் இசைப்புயல் தான் இசையமைத்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X