twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒலிம்பிக் வீரர்களுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல்… இணையத்தில் வைரலாகிறது !

    |

    சென்னை : ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ந் தேதி தொடங்க உள்ளது.

    இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் 126 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    அந்தரத்தில் தொங்கி யோகா செய்யும் அல்லு அர்ஜுன் மனைவி… வைரலாகும் புகைப்படம் !அந்தரத்தில் தொங்கி யோகா செய்யும் அல்லு அர்ஜுன் மனைவி… வைரலாகும் புகைப்படம் !

    இவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏஆர் ரஹ்மான், ஹிந்துஸ்தானி வே என்ற பாடலை பாடகி அனன்யா பிர்லாவுடன் இணைந்து உருவாக்கி உள்ளார். இந்த பாடலின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

    ஜூலை 23ந் தேதி

    ஜூலை 23ந் தேதி

    2020ம் ஆண்டு நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால், ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ந் தேதி தொடங்க உள்ளது. இப்போட்டி ஆகஸ்ட் 8 ந் தேதி வரை நடைபெற உள்ளன.

    தேசியக் கொடியை ஏந்துகிறார்

    தேசியக் கொடியை ஏந்துகிறார்

    இந்தியாவின் சார்பில் 126 வீரர்கள் மற்றும் அதிகாரிகள், பயிற்சியாளர்கள் என 75 பேர் டோக்கியோவுக்கு செல்ல தேர்வாகியுள்ளனர். இந்த முறை 56 சதவீதம் வீரர்களுக்கும், 44 சதவீதம் வீராங்கனைகளுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒலிம்பிக்கின் தொடக்க நாளன்று இந்திய தேசியக்கொடியை ஏந்திச்செல்ல மகளிர் அணி சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் ஆண்கள் அணி சார்பில் இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    அனன்யா பிர்லா

    அனன்யா பிர்லா

    நம் இந்திய வீரர்களை ஊக்குவிப்பதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சுயாதீன இசைக்கலைஞர் அனன்யா பிர்லாவுடன் இணைந்து ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாடல் ஒன்றை உருவாக்கி உள்ளார். இந்த பாடலின் மியூசிக் வீடியோவை பிர்லாவின் பேனர் ஆன்டிமேட்டர் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரித்த டேனி மாமிக் மற்றும் சஹான் ஹட்டங்கடி ஆகியோர் இயக்குகின்றனர்.

    டீஸர்

    இந்த பாடலின் டீசரை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும், அதில் "எங்கள் பாடலின் டீஸரைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி, இந்துஸ்தானி வே. எங்கள் சாம்பியன்களுக்காக நாங்கள் உற்சாகப்படுத்தும்போது எங்களுடன் சேருங்கள்! #HindustaniWay # Cheer4India". முழு பாடல் விரைவில் கைவிடப்படும். இந்துஸ்தானி வழியில் கூடுதல் புதுப்பிப்புகளுக்கு காத்திருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

    English summary
    AR Rahman’s composed song for olympic champions
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X