பல லட்சத்திற்கு ஏலம் போன ஏஆர் ரஹ்மானின் உடை… இவ்வளவு விலை கொடுத்து யார் வாங்குனா?

சென்னை : ஏ.ஆர். ரஹ்மானின் உடை பல லட்சத்திற்கு ஏலம் போனதாக இணையத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் மட்டுமின்றி, இந்திய சினிமாவில் அசைக்க முடியாத இசையமைப்பாளா் ஆவார்.

இசை மேஸ்ட்ரோ ஏஆர் ரஹ்மான் சர்வதேச அளவில் புகழ் பெற்று இந்திய இசையை உலகளவில் பிரதிபலிக்க செய்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

1992ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் இசையில் வெளிவந்த ரோஜா திரைப்பட பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது. அந்த நாட்களில் எங்கு திரும்பினாலும், ரோஜா திரைப்பட பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும். இதையடுத்து, தனது முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார்.

பாடலில் மெய்மறந்து

பாடலில் மெய்மறந்து

இதையடுத்து, தமிழ், மலையாளம், இந்தி படங்களுக்கு மட்டுமின்றி, ஆங்கிலம், சீன மொழி படங்களுக்கும் இசையமைத்து சாதனை படைத்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ஆட்டம் போடவும் வைக்கும், பாடலில் மெய்மறந்து லாபிக்கவும் வைக்கும், சோகத்தில் கரைந்து கண்ணீரையும் வரவழைக்கும். இந்திய நாட்டுப்புற மெல்லிசையை மேற்கத்திய இசையுடன் இணைத்து பாமரனையும் ஆட்டம் போடவைத்த இசைக்கலைஞன் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஆஸ்கர் நாயகன்

ஆஸ்கர் நாயகன்

2009 இல் ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றார். இந்த விருதின் மூலம் தமிழ்நாட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் பெருமைப்படுத்தினார். சினிமாத்துறையில், 27 வருடங்களுக்கும் மேலாக தன்னிகரில்லா இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

பல லட்சத்திற்கு ஏலம்

பல லட்சத்திற்கு ஏலம்

இந்நிலையில், ராஜஸ்தான் காஸ்மோ கிளப் அறக்கட்டளையின் 28வது தின விழா ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. இதில், தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஒரு லட்சம் ரூபாயை வழங்கினார். இதன் ஒருபகுதியாக மாற்றுத்திறனாளிகள் ஆடைகள் வாங்க உதவும் திட்டத்தின் கீழ் ஏ.ஆர்.ரஹ்மான் அணிந்திருந்த ஆடை ஏலம் விடப்பட்டது. இதில் அவர் அணிந்திருந்த ஆடை ரூ.6.75 லட்சத்துக்கு விற்பனையானது. பிரமோத் சுரடியா இந்த ஆடையை ஏலத்தில் வாங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் ஏலத்தில் விடப்பட்டது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X