»   »  'அம்மா கொடுத்த பரிசாச்சே... பத்திரமா வச்சிருக்கக் கூடாதா?'- ரஹ்மானுக்கு ரசிகர்கள் அட்வைஸ்

'அம்மா கொடுத்த பரிசாச்சே... பத்திரமா வச்சிருக்கக் கூடாதா?'- ரஹ்மானுக்கு ரசிகர்கள் அட்வைஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆஸ்கர் தமிழன் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தன் அம்மா பரிசாகக் கொடுத்த காரை படமெடுத்து இன்று ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

அது ஒரு அம்பாஸிடர் கார். 1986-ல் ரஹ்மான் பிரபல இசையமைப்பாளர்களுக்கு கீ போர்டு ப்ளேயராக இருந்த காலத்தில் அவரது அம்மா வாங்கித் தந்த கார் அது.

AR Rahman's first car

இந்தக் காரை பராமரிக்க முடியாத நிலையில், ஒரு மரத்தடியில் தூசி படிந்து காயலான் கடைக்குப் போடும் நிலையில் காணப்படுகிறது.

இந்தக் கார் படத்தைப் போட்டு, 'என் அம்மா 1986ல் எனக்காக வாங்கித் தந்த முதல் கார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் படத்தைப் பார்த்த பலரும், "என்ன சார்... உங்க அம்மா கொடுத்த பரிசாச்சே.. விலை மதிக்க முடியாத இந்த பரிசை இப்படியா வைத்துக் கொள்வது? நன்றாகப் பராமரித்து வைத்துக் கொள்ளுங்கள்," என்ற ரீதியில் கமெண்ட்டுகள் குவிந்துள்ளன.

சிலர் ரஹ்மானைப் பாராட்டியும் கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
AR Rahman has published his first car in facebook presented by his mother.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil