ஏஆர் ரஹ்மானின் முதல் தயாரிப்பு.. 99 ஸாங்ஸ் ரொமான்ட்டிக் படம்.. அசத்தல் அப்டேட்!

சென்னை: ஏஆர் ரஹ்மான் தயாரிப்பில் உருவாகியுள்ள 99 சாங்ஸ் படம் குறித்த அசத்தல் அப்டேட் வெளியாகியுள்ளது.

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் முதல் முறையாக தயாரிக்கும் படம் 99 சாங்ஸ். மியூஸிக்கல் டிராமா ஃபிலிமான இப்படத்தை அறிமுக இயக்குநரான விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.

AR Rahmans first production 99 Songs movie will be released on 16th April

இந்தப் படம் ஒரு போராடும் பாடகர் எப்படி வெற்றிகரமான இசை அமைப்பாளராக மாற விரும்புகிறார் என்பதை பற்றிய கதை என தெரிகிறது. இதில் இஹான் பாத் மற்றும் எடில்ஸி வர்கீஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு ஏஆர் ரஹ்மானே கதை எழுதி இசையமைத்துள்ளார். ரொமான்டிக் படமான இந்தப் படம் குறித்த மாஸ் அப்டேட்டை ஏஆர் ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

AR Rahmans first production 99 Songs movie will be released on 16th April

அதன்படி 99 ஸாங்ஸ் படம் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், 99 ஸாங்ஸ் .. 16 April , 2021 அன்று தமிழில் வெளியிடப்படும் என்று மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது. ரஹ்மான் இந்தப் படத்தை தனது ஒய் எம் மூவிஸ் பேனரில் கீழ் தயாரித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X