இயற்கை அன்னைக்காக ஒரு ஆந்தம்.. இசைப்புயல் வெளியிட்ட Hands around the world டிரைலர்!
இயற்கை அன்னைக்காக ஒரு ஆந்தம்.. இசைப்புயல் வெளியிட்ட Hands around the world டிரைலர்!
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி உள்ள Hands around the world ஆல்பத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.
50வது பூமி தினம் கடந்த ஏப்ரல் 22ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

பூமி தினத்தை முன்னிட்டு, உலகில் உள்ள பல முன்னணி கலைஞர்களுடன் இணைந்து ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கியுள்ள Hands around the world இசை ஆல்பம் பருவ மாற்றத்தை மையமாக வைத்தும், பூமித் தாயை மக்கள் எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும், நமக்கு கிடைத்திருக்கும் இந்த இயற்கையை வீணடிக்கக் கூடாது உள்ளிட்ட பல உன்னத கருத்துக்களை உள்ளடக்கி இந்த பாடல் உருவாகி இருக்கிறது.
Hands around the world பாடல் டிரைலரை நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் இசைப்புயல் வெளியிட்டுள்ளார்.
1985ம் ஆண்டு We are the world எனும் சர்வதேச கூட்டமைப்பை உருவாக்கிய கென் கிரேகன் தலைமையில் இந்த புதிய பாடல் உருவாகி இருக்கிறது.
பூமி ஆந்தமாக உருவாகி உள்ள இந்த மிகப்பெரிய இசைப் பயணத்தில் சர்வதேச கலைஞர்களான நடாஷா பெண்டிங்ஃபீல்டு, கோடி சிம்ப்சன், ஆத்ம பாடகர் MAJOR, ஒபேரா இசைக் கலைஞர் ஜோனதன் சிலியோ ஃபரோ, எரிக்கா அட்கின்ஸ் உள்ளிட்ட பலருடன் இணைந்து ஏ.ஆர். ரஹ்மான் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைலரில் வரும் பாடல் மற்றும் விஷுவல் இயற்கை அன்னையின் ஆற்றலையும், அதனை மனிதர்கள் தங்கள் சுய நலத்திற்காக சீரழித்து வருவதும் தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications











