»   »  'கண்ணீர் நதியாய் ஆனாலும்.... தமிழா நாம் மீண்டும் எழுவோமே...!' - இசைப் புயல் தரும் ஆறுதல்

'கண்ணீர் நதியாய் ஆனாலும்.... தமிழா நாம் மீண்டும் எழுவோமே...!' - இசைப் புயல் தரும் ஆறுதல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆயிரம் கனவுகள் கரைந்தாலும்
இருளால் காலம் உறைந்தாலும்
கண்ணீர் நதியாய் ஆனாலும்
தூங்கும் நகரம் மிதந்தாலும்...

AR Rahman's heart melting Nenje Ezhu teaser

தமிழா நாமும் இணைந்தோமே...
தமிழா நாமும் இணைந்தோமே!

மீண்டும் எழுவோமே...

நெஞ்சே எழு... நெஞ்சே எழு!

- ஏ ஆர் ரஹ்மான் குரலில் இப்படி ஒரு டீசர் இன்று வெளியாகியுள்ளது, அவரது நெஞ்சே எழு இசைகக் கச்சேரிக்காக.

வெள்ளத்தால் நொந்த உள்ளத்தை இதமாகத் தடவிக் கொடுப்பது போல அமைந்துள்ள இந்தப் பாடல், கேட்ட அத்தனை பேரையும் பரவசப்படுத்தி பாராட்டுக்களைக் குவித்துள்ளது.

சென்னை (ஜனவரி 16), கோவை (ஜனவரி 23), மதுரை (ஜனவரி 31) ஆகிய நகரங்களில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் நிதியின் ஒரு பகுதி சென்னை, கடலூர் வெள்ள நிவாரணத்துக்குச் செல்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உணர்வுபூர்வமான உருவாக்கப்பட்ட டீசர்தான் இது. மரியான் படத்தில் இடம்பெற்ற நெஞ்சே எழு பாடலின் ஆரம்ப வரிகளைச் சற்று மாற்றியமைத்து இந்த டீசரை உருவாக்கியுள்ளார் ஆஸ்கர் தமிழன் ஏ ஆர் ரஹ்மான்.

அந்தப் பாடலின் வீடியோ இது:

English summary
Here is the heart touching teaser song of AR Rahman's Nenje Ezhu concert.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil