கண்ணா.. பாகுபலி 2 ரெக்கார்ட்ஸை அப்டிக்கா வய்யி.. '2.ஓ' இசை ரிலீஸுக்கு தயாராகும் ரசிகர்கள்!
சென்னை : ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன் ஆகியோர் நடித்துள்ள படம் '2.O'. லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் ரூ 400 கோடி செலவில் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் உள்ள பர்ஜ் பார்க்கில் வரும் அக்டோபர் 27 வெள்ளிக்கிழமை நடக்கிறது. இந்த நிகழ்வில் ஏ.ஆர்.ரஹ்மான் தன் குழுவினருடன் படத்தின் பாடல்களை லைவாக இசைக்கிறார்.
இந்த விழாவில் படக்குழுவினர் மற்றும் திரையுலகின் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். இதனால் ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் உற்சாகமாகி வருகிறார்கள்.
ரஹ்மானின் நேரடி இசையுடன்
3D- முப்பரிமாண முறையில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் 2D கேமராவில் எடுக்கப்பட்டு 3D-யாக மாற்றப்படும். ஆனால், '2.O' படம் முழுவதும் 3D கேமராவைப் பயன்படுத்தியே எடுக்கப்பட்டுள்ளது. அதனால், படம் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகுபலி 2-வை அடிக்கணும்
நீங்க என்ன பண்ணுவிங்களோ தெரியாது... எங்களுக்கு பாகுபலி 2 பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட்ஸ அடிக்கனும்... ஆங்.
ரசிகர் உருவாக்கிய போஸ்டர்
ரஜினியின் '2.O' படத்துக்காக ரசிகர் ஒருவர் போஸ்டர் டிசைன் செய்து 'இது நம்ம டிசைன்' எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்.
ராமசாமி குப்புசாமி
தெய்வ தரிசனம். ரெக்கார்ட் மொத்தத்தையும் எடுத்து வைக்கவும். அப்பறம் ராமசாமி வரல குப்புசாமி வரலனு சொல்ல கூடாது..!
இங்க இடம் இல்லையா
ஏன் இங்க இசை வெளியீட்டு விழா நடத்த இடம் இல்லையா? படத்தையும் அங்க மட்டும் ரெலீஸ் பண்ணுங்க... எங்களுக்கு தமிழ் ராக்கர்ஸ் இருக்கு என ஒருவர் கமென்ட் செய்துள்ளார்.
ஒரே மேடையில்
இதன் நேரலை எந்த தொலைக்காட்சியில் காட்டுறீங்க தெய்வமே... ஓரே மேடையில் பல தெய்வங்களை ரசிக்கும் ஓரு அபூர்வ வாய்ப்பு.


Click it and Unblock the Notifications











