நம்பிக்கை ஆந்தம் மூலம் மீண்டும் அமெரிக்காவை கலக்கும் ஏ.ஆர். ரஹ்மான்.. கேட்கவே அவ்ளோ இதமா இருக்கு!

சென்னை: பாடகி தீ-ன் என்ஜாய் எஞ்சாமி பாடல் போலவே இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் நம்பிக்கை ஆந்தம் பாடலின் விளம்பரங்களும் அமெரிக்காவில் களைகட்டி வருகின்றன.

குல்சார் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து உருவாக்கி உள்ள Meri Pukaar Suno உலகளவில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் பல பிரபலங்கள் இணைந்து இந்த நம்பிக்கை ஆந்தம் பாடலை பாடியுள்ளனர்.

அமெரிக்காவை கலக்கும் இசைப்புயல்

ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் தமிழரின் பெருமையை நிலைநாடியவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். தற்போது மீண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் நகரங்களில் ஏ.ஆர். ரஹ்மான் கொடி பறந்து வருகிறது.

நம்பிக்கை ஆந்தம்

நம்பிக்கை ஆந்தம்

பிரபல பாலிவுட் இசைக் கலைஞர் குல்சார் உடன் இணைந்து ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கி உள்ள மேரி புக்கார் சுனோ எனும் நம்பிக்கை ஆந்தம் பாடல் உலகளவில் வைரலாகி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் நகரங்களில் உள்ள பில்போர்ட்களில் அதன் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன.

சித்ரா டு ஷ்ரேயா கோஷல்

சித்ரா டு ஷ்ரேயா கோஷல்

இந்த பாடலை பிரபல பின்னணி பாடகர்களான சித்ரா, ஷ்ரேயா கோஷல், ஆல்கா யக்னிக், சாஷா திரிபாதி, சாதனா சர்கம், அர்மான் மாலிக் மற்றும் அசீஸ் கவுர் உள்ளிட்ட பாடகர்கள் பாடியுள்ளனர். சின்ன குழந்தைகள் ஓவியம் வரைவது போல மிகவும் ரம்மியமாக இந்த பாடலின் வீடியோ படமாக்கப்பட்டுள்ளது.

குவிகிறது பாராட்டு

மீண்டும் இசைப்புயலின் ஆதிக்கம் அமெரிக்க நகரங்களின் பில்போர்டுகளை அலங்கரித்து வருவதை பார்த்த பல தமிழ் ரசிகர்கள் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானை கொண்டாடி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் இந்த பாடலை ஷேர் செய்தும் ரஹ்மானை பாராட்டி வருகின்றனர். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள கோப்ரா படம் கடைசி கட்ட படப்பிடிப்புக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X