இசைத்தலைவனின் வெறித்தன பி.ஜி.எம்'ஸ் - ரஹ்மான் ஸ்பெஷல்! #HBDARRahman
Recommended Video

'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மானின் 51-வது பிறந்தநாள் இன்று. 'ரோஜா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரஹ்மான் 25 ஆண்டுகளைக் கடந்திருக்கிறார்.
1992-ம் ஆண்டு 'ரோஜா' படத்தின் இசை மூலம் ரசிகர்களைக் கட்டிப்போட்ட ரஹ்மான் ஒவ்வொரு நாளும் தனது இசையின் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்திக் கொண்டேதான் செல்கிறார்.
இளையராஜாவுக்குப் பிறகான இசையின் அடுத்த தலைமுறையாகக் கொண்டாடப்படும் ரஹ்மானின் பிறந்த நாளான இன்று ட்விட்டரில் ரசிகர்கள் பகிர்ந்திருக்கும் மோஸ்ட் ஃபேவரிட் இசைத் துணுக்குகளைக் கேட்டுக் களிப்புறலாம்.
இந்தியன்
'இந்தியன்' படத்தில் கமல்ஹாசன், சுகன்யா சந்திப்பின்போது ஒலிக்கும் பின்னணி இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் மிரட்டி இருப்பார். ரஹ்மானின் இசையும், குரலும் சேர்ந்து அழகான உணர்வை உருவாக்கியிருக்கும்.
ரோஜா
அரவிந்த்சாமி, மதுபாலா வரும் காட்சியின்போது ஒலிக்கும் பின்னணி இசை மாஸ்டர் பீஸ். ரஹ்மான் சினிமாவில் அறிமுகமான முதல் படமான 'ரோஜா' அவரது புகழை என்றென்றும் தாங்கி நிற்கும்.
அலைபாயுதே
'அலைபாயுதே' படத்தில் இடம்பெற்ற 'சினேகிதனே' பாடல் பலருக்கும் ஃபேவரிட். ரஹ்மான் ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் தவறாமல் இடம்பிடிக்கும் இந்தப் பாடல் மெலடி வரிசையில் டாப் ஹிட்.
எவனோ ஒருவன்
'அலைபாயுதே' படத்தில் இடம்பெற்ற பின்னணி இசைக் கோர்ப்புகள் ரசிகர்களை கொண்டாடச் செய்பவை. புல்லாங்குழல் இசையும், வயலினும் சேர்ந்து நெஞ்சை உருக்கும்.
படையப்பா
'படையப்பா' படத்தில் அதிரடி தீம் மியூசிக்கும், பி.ஜி.எம்மும் தான் ரஜினியின் ஸ்டைலை வேற லெவலில் காட்டும்.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் அஜித் - தபூ காதலையும், உணர்வுகளையும் இசையின் வழியாக பார்வையாளர்களின் இதயத்துக்குள் இறக்கியிருப்பார் ரஹ்மான்.
ஜோதா அக்பர்
ஹிருத்திக் ரோஷன் நடித்த 'ஜோதா அக்பர்' படம் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்காகவே அதிகம் சிலாகிக்கப்படும்.
கடல்
மணிரத்னம் இயக்கிய கடல் படம் தோல்வியடைந்த போதிலும், ரஹ்மானின் இசை அந்தப் படத்திலும் சில மேஜிக் செய்திருக்கும்.
சில்லுனு ஒரு காதல்
'சில்லுனு ஒரு காதல்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரிட்.
ஊர்வசி ஊர்வசி
'காதலன்' படத்தில் இடம்பெற்ற 'ஊர்வசி ஊர்வசி' பாடலின் துள்ளல் இசை ரஹ்மானின் புதுமை. இசை ரட்சகன் ஏ.ஆர்.ரஹ்மான் எப்போதும் இசைத்திருக்க வாழ்த்துவோம்.


Click it and Unblock the Notifications











