ரம்ஜான் ஸ்பெஷல்.. தளபதி 63 படம் பற்றி சுடச்சுட அப்டேட் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!
தளபதி 63 படப் பாடல்கள் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை: தளபதி 63 படத்தின் பாடல்கள் பற்றி தனது டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி என கடந்த சில நாட்களாக டிவீட்களால் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது டிவீட்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகின.
இந்நிலையில், தற்போது ரஜினி மற்றும் விஜய் படம் பற்றிய அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்களை இன்னும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளார்.

ரஜினி பட ரிலீஸ்:
அதாவது, ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 திரைப்படம் வரும் ஜூலை 12ம் தேதி, சீனாவில் ரிலீசாகிறது. சுமார் 56,000 ஸ்கிரீன்களில் இப்படம் வெளியாக இருக்கிறது. இதற்கான ப்ரீமியர் ஷோ ஜூன் 28-ம் தேதி நடைபெற இருப்பதாக, அப்படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

தளபதி 63 அப்டேட்:
இந்நிலையில் நேற்று அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படம் பற்றிய அப்டேட் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். தனது ஸ்டூடியோவுக்கு வந்திருக்கும் அட்லியின் படத்தைப் பகிர்ந்து, ‘இங்கே யார் இருக்கிறார்கள் எனப் பாருங்கள். எடிட் செய்த இரண்டு பாடல்களை முதலில் பார்த்தது நான் தான்' எனக் குறிப்பிட்டு தம்ஸ் அப் மற்றும் பயர் எமோஜிக்களையும் அவர் இணைத்துள்ளார்.

2 பாடல்கள்:
இதன் மூலம் தளபதி 63 படத்தின் இரண்டு பாடல்கள் தயாராகி விட்டது என்பது தெரிய வந்துள்ளது. நிச்சயம் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள பயர் எமோஜிக்களைப் போலவே அந்தப் பாடல்களும் தீயாய் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ரசிகர்கள் வாழ்த்து:
இன்று ரம்ஜான் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ரஹ்மானின் இந்த அப்டேட்டால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் விஜய் ரசிகர்கள். டிவிட்டர் வாயிலாக தங்களது ரம்ஜான் வாழ்த்துக்களை அவர்கள் தெரிவித்து வருகின்றனர். படக்குழுவும் இன்று தளபதி 63 பற்றிய அப்டேட்களை வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு அவர்கள் மத்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











