சிம்புவுக்காக சம்பளத்தையும் குறைத்தாரா ஏஆர் ரஹ்மான்... பத்து தல Exclusive அப்டேட்!

சென்னை: சிம்புவின் பத்து தல திரைப்படம் வரும் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

சிம்புவுடன் கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கெளதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சில்லுன்னு ஒரு காதல் புகழ் கிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சிம்புவுக்காகவே இந்தப் படத்தில் கமிட் ஆனேன் எனக் கூறிய ஏஆர் ரஹ்மான், சம்பளமும் குறைவாக வாங்கியதாக தான் தகவல் வெளியாகியுள்ளது.

 விரைவில் பத்து தல

விரைவில் பத்து தல

சிம்பு நடித்துள்ள பத்து தல படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 30ம் தேதி வெளியாகிறது. சிம்புவுடன் கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பத்து தல படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் பேசிய ஏஆர் ரஹ்மான் சிம்பு குறித்து பேசியது கடும் வைரலானது.

 ஏஆர் ரஹ்மானின் சம்பளம்

ஏஆர் ரஹ்மானின் சம்பளம்

பத்து தல ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ஏஆர் ரஹ்மான், இங்கே டிஆர் வந்துள்ளார். அவர் தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்றார். மேலும், பத்து தல படத்தில் சிம்புவுக்காக தான் கமிட் ஆனேன், இன்னொரு காரணம் இயக்குநர் கிருஷ்ணா. 'அக்கறையில' பாடல் சிம்பு பாட வேண்டியது, ஆனால் அவர் தாய்லாந்து சென்றதால் நானே பாடிவிட்டேன் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், பத்து தல படத்திற்காக ஏஆர் ரஹ்மான் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் கிடைத்துள்ளது.

 சிம்புவுக்காக தான் இதுவும்

சிம்புவுக்காக தான் இதுவும்

பொதுவாக ஏஆர் ரஹ்மான் ஒரு படத்திற்காக 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். ஆனால், பத்து தல படத்திற்காக 8 கோடி ரூபாய் மட்டுமே வாங்கியதாக சொல்லப்படுகிறது. சிம்புவுக்காகவே இந்தப் படத்தில் கமிட்டான ஏஆர் ரஹ்மான், படத்தின் பட்ஜெட்டை பொறுத்து தனது சம்பளத்தையும் குறைத்துக் கொண்டாராம். தனக்கு பிரச்சினை என்றால் முதல் நபராக வந்து நிற்பவர் ஏஆர் ரஹ்மான் தான் என, பத்து தல ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிம்புவும் நெகிழ்ச்சியாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 தொடருமா ARR - STR கூட்டணி

தொடருமா ARR - STR கூட்டணி

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, செக்க சிவந்த வானம், வெந்து தணிந்தது காடு என தொடர்ந்து சிம்பு படங்களுக்கு இசையமத்து வருகிறார் ஏஆர் ரஹ்மான். இந்த வரிசையில் தான் தற்போது பத்து தல திரைப்படமும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இதனைத் தொடர்ந்து சிம்பு தனது STR 48 படத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இந்தப் படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கும் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனிடையே பத்து தல படத்தில் சிம்புவுக்காக கமிட்டானது மட்டும் இல்லாமல் சம்பளத்தையும் ஏஆர் ரஹ்மான் குறைத்துள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X