இந்தி மொழி சர்ச்சை.. நெத்தியடி பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான்.. மனுஷன் எப்போதுமே வேறமாறி தான் !
சென்னை : இந்தி மொழி சர்ச்சை குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் நச்சுனு பதிலளித்துள்ளார். அவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Recommended Video

உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும். ஆங்கிலத்துக்கு மாற்று இந்திதான். இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலத்துக்குப் பதில் இந்தி பேச வேண்டும்.
இந்தியை, ஆங்கிலத்துக்கு மாற்றான மொழியாக கொண்டு வரும் தருணம் வந்து விட்டது என்று அமித் ஷா கூறியிருந்தார்.

கடும் கண்டனம்
அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்களும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைப்படத் துறைகளைச் சேர்ந்த பல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களும் அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

கருத்தரங்கம்
இந்நிலையில் சென்னையில் சிஐஐ சார்பில் நடைபெற்ற தென்னிந்திய ஊடக பொழுதுபோக்கு கருத்தரங்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு ரஹ்மானை கௌரவித்தார். சில ஆண்டுகளுக்கு முன் சீனர் ஒருவரை சந்தித்தேன். வட இந்தியர்கள் நிறமாக இருப்பதாகவும் அதனால் அவர்களின் படங்களை விரும்பி பார்ப்பதாக கூறினார். கருப்பாக இருப்பவர்களுக்கு நல்ல கதாபாத்திரங்களை கொடுங்கள் என்றார்.

தமிழ் தான் இணைப்பு மொழி
இந்நிகழ்ச்சி முடிந்து ஏ.ஆர்.ரஹ்மான் வெளியில் வந்தபோது பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்தனர். அப்போது இந்தி தான் இணைப்பு மொழி என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதைப் பற்றி ஏ.ஆர்.ரஹ்மானிடம் கருத்து கேட்டனர். அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் எப்போதும் போல கூலாக தமிழ் தான் இணைப்பு மொழி என கூறிவிட்டு அமைதியாக தன் காரில் ஏறி சென்றுவிட்டார். தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த அந்த பதில் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இந்த பதிலைக் கேட்ட ரசிகர்கள் இந்த மனுஷன் எப்போதுமே வேற மாதிரிதான் என பாராட்டி வருகின்றனர்.

இன்பத் தமிழ்
ஏ.ஆர்.ரஹ்மான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருதினங்களுக்கு முன் ழகரத்தை ஏந்தியிருக்கும் புரட்சிப் பெண்ணின் புகைப்படத்துக்கு கீழே பாரதிதாசனின் இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர் என்ற வரிகளை பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை சுமார் 50,000 பேர் லைக் செய்துள்ளனர். சுமார் 11,000 பேர் ரீட்வீட் செய்திருந்தனர்.


Click it and Unblock the Notifications











