எளிமையாக நடந்த ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமணம்… மாப்பிள்ளை யார் தெரியுமா?

சென்னை : இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் மகளுக்கு மிகவும் சிம்பிளாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

ஏ ஆர் ரஹ்மான் கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு அமீன் என்ற மகனும், கதீஜா ரகுமான், ரெஹிமா ரகுமான் மகனும், இரு மகள்களும் உள்ளனர்.

ஏ. ஆர்.ரஹ்மான்

ஏ. ஆர்.ரஹ்மான்

இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரஹ்மான் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார். பின் ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும் இசையமைத்து உள்ளார். மேலும், இரண்டு ஆஸ்கர் விருதை குவித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

கதீஜா - ரியாஸ்தீன் ஷேக்

கதீஜா - ரியாஸ்தீன் ஷேக்

ஏ ஆர் ரஹ்மானின் முதல் மகள் கதீஜா - ரியாஸ்தீன் ஷேக் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி மாதம் மிகவும் எளிய முறையில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ரியாஸ்தீன் ஷேக் தொழிலதிபராக இருப்பதாக கூறப்படுகிறது. கதீஜா ரகுமான் தந்தையைப் போல் இசையின் மீது ஆர்வம் கொண்டவர். இவர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படத்தில் இடம்பெறும் புதிய மனிதா பாடலை பாடினார்.

திருமணம் முடிந்தது

திருமணம் முடிந்தது

இந்நிலையில், மகள் கதீஜா - ரியாஸ்தீன் ஷேக் திருமணம் நேற்று மிகவும் எளிமையான முறையில் நடந்துள்ளது. மகளின் திருமண புகைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும்,எல்லா வல்லவர் தம்பதியினரை ஆசீர்வதிக்கட்டும் என மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

Recommended Video

வெறி அதிகமாச்சு | AR Rahman and Parthiban Conversation | Iravin Nizhal
வாழ்த்தும் ரசிகர்கள்

வாழ்த்தும் ரசிகர்கள்

ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில் ரியாஸ்தீன் ஷேக் முகமது வெள்ளை நிற ஷெர்வானியிலும், கதீஜா வெள்ளை நிற உடையில் அரச குடும்ப தோற்றத்தில், அதே வெள்ளை நிறத்தால் ஆன ஷோபாவில் அமர்ந்து இருந்தனர். தம்பதிகளுக்கு பின், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மனைவி,மகன் மற்றும் மகளும் உள்ளனர். இந்த புதுமண தம்பதியினருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X