Don't Miss!
- Lifestyle கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- News பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீதான வழக்கு ரத்தா? ஒத்திவைத்த ஹைகோர்ட்
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஏ.ஆர்.ரஹ்மானின் சுயாதீன ஆல்பம் "மூப்பில்லா தமிழ் தாயே’’ … முழு பாடலை கேட்க ரசிகர்கள் ஆவர்!
சென்னை : ஏ.ஆர். ரஹ்மான் தனது சுயாதீன ஆல்பம் பாடலில் நடிக்கும் வாய்பைப் டிக்டாக் புகழ் கேப்ரில்லா செல்லஸூக்கு வழங்கி உள்ளார்.
'மூப்பில்லா தமிழ் தாயே' இன் டீஸர் தமிழ் புத்தாண்டு அன்று யூடியூப்பில் வெளியானது.
எதுல தான்ப்பா ரிலீஸ் பண்ண போறீங்க...குழப்பத்தில் சிவகார்த்திகேயனின் டாக்டர்
டீசர், இசை ஆர்வலர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முழு பாடலையும் கேட்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
புது முயற்சி
புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மஜ்ஜா என்ற புதிய முயற்சியைத் தொடங்கினார். இது தென்னிந்திய சுதந்திர இசையை உலக அளவில் உயர்த்தும் பிரச்சாரமாகும். மஜ்ஜா முயற்சியின் உத்தியோகபூர்வ குறிக்கோள், தெற்காசிய சுயாதீன கலைஞர்களின் குரலை உலகளவில் பெருக்குவதே முதல் நோக்கமாகும்.
மறுமலர்ச்சி
மஜ்ஜா கலைஞர்களை ஒரு வளமான சுற்றுச்சூழலுக்குள் கொண்டுவர இது பெரிதும் உதவும். சென்னையில் ஒரு முதன்மையான உலகளாவிய இசை விழாவாகும். உலகெங்கிலும் உள்ள தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த சுயாதீன கலைஞர்களை ஒன்றிணைத்து சுயாதீன இசைக்காக சென்னையில் ஒரு கலாச்சார மறுமலர்ச்சியை உருவாகி உள்ளது.
என்ஜாய் என்ஜாமி
மஜ்ஜா முன்முயற்சியின் முதல் பாடலான என்ஜாய் என்ஜாமி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஹிட் பாடலாக மாறியது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்த பாடல் 182 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைத் தாண்டியுள்ளது, மேலும் இந்த பாடலுக்கு உலகம் முழுவதும் உள்ள இசை ஆர்வலர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது.
கேப்ரில்லா
டிக் டாக் மூலம் பிரபலமாகி தற்போது தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் கேப்ரில்லா செல்லஸூக்கு ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரியும் அட்டகாசமான வாய்ப்பு உருவாகி உள்ளது. மேலும் அவருடன் எடுத்த புகைப்படத்தையும் தனது இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ரசிகர்கள் உற்சாகம்
ஏ.ஆர்.ரஹ்மான் 'மூப்பில்லா தமிழ் தாயே' என்ற பாடலை இசையமைத்து வருகிறார். இந்த பாடல் வரிகளை தாமரை எழுதியுள்ளார். சூப்பர் சிங்கர் பரபரப்பான பூவையரும் இந்த பாடலுக்காக குரல் கொடுத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் ரஹ்மான் அவருடனான புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். ரஹ்மானின் இந்த புது முயற்சி ரசிகர்களை உற்சாக மடையச்செய்துள்ளது.