அமெரிக்காவில் இசையமைத்து வரும் ஏ.ஆர். ரஹ்மான்.. பொன்னியின் செல்வன் குறித்து போட்ட அடடே அப்டேட்!

Recommended Video

Ponniyin Selvan Unnoticed Secrets | Ponniyin Selvan Title Design

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் பட புகைப்படங்களை சமீபத்தில் பார்த்த ஏ.ஆர். ரஹ்மான் அதுகுறித்த பதிவை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

லைகா நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.

கல்கியின் நாவல்

கல்கியின் நாவல்

அமரர் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் தமிழர்களின் பெருமையாக திகழ்கிறது. இதனை சினிமாவாக எடுக்க பலரும் முயற்சித்து கடைசியில் கை விட்டனர். இயக்குநர் பாரதிராஜா கூட கமல், ஸ்ரீதேவி, ரேவதியை வைத்து பொன்னியின் செல்வனை இயக்க திட்டமிட்டு இருந்ததாக தற்போது கூறியுள்ளார். இந்நிலையில், இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கி வருகிறார்.

நட்சத்திரங்கள்

நட்சத்திரங்கள்

பொன்னியின் செல்வன் கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மிகவும் வலிமை வாய்ந்ததாகவும், ஆழமாகவும் எழுதப்பட்டிருக்கும். அதற்கு நேர்மை செய்யும் வகையில் நட்சத்திர பட்டாளத்தை கொண்டு பிரம்மாண்டமாக மணிரத்னம் இயக்கி வருகிறார். ஜெயம் ரவி, சியான் விக்ரம், கார்த்தி, சரத்குமார், பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பார்த்திபன், லால் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

அடுத்த ஷெட்யூல்

அடுத்த ஷெட்யூல்

தாய்லாந்து நாட்டில் உள்ள கோயில்கள், தீவுகள் என பல இடங்களில் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வரும் பொன்னியின் செல்வன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாகவும், அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஹ்மான் ட்வீட்

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ரோஜா படத்தில் இருந்து பல படங்களில் அவருடன் இணைந்து இசையமைத்து வரும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், பொன்னியின் செல்வன் படத்திலும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் ஒளிபதிவாளர் ரவி வர்மன் பொன்னியின் செல்வன் படத்தின் சில காட்சிகளை காண்பித்தார். வேற லெவலில் இருக்கிறது என ரஹ்மான் போட்ட ட்வீட் தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

தமிழின் காவியம்

ஏ.ஆர். ரஹ்மான் பொன்னியின் செல்வன் குறித்து போட்ட ட்வீட் மணிரத்னம் மற்றும் பொன்னியின் செல்வன் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ரசிகர்கள் பலரும் அவரது ட்வீட்டுக்கு கீழே கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த ரசிகர், பொன்னியின் செல்வன் தமிழின் காவியம்.. உங்கள் இசை அதற்கு மேலும் உயிர் கொடுக்கும்

நாவல் படிக்கிறேன்

ரஹ்மானின் இந்த ட்வீட்டுக்கு கீழே கமெண்ட் போட்டுள்ள இந்த ரசிகர், தற்போது தான் பொன்னியின் செல்வன் நாவலை படித்து வருகிறேன். படத்தை விட நாவல் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால், பொன்னியின் செல்வன் படத்தில் உங்க இசைக்காக வெயிட்டிங் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X