சூஃபி நடனத்தை வரைந்த பிரபல ஓவியர்.. புகைப்படத்தை திருப்பி பார்த்தால்.. ஓவியத்தை பகிர்ந்த இசைப்புயல்!

சென்னை : சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசைப்புயல் ஏஆர் ரஹ்மானை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

பல இசையமைப்பாளர்களுக்கு மட்டுமில்லாமல் பல விஷயங்களுக்கு அவர்தான் இன்ஸ்பிரேஷன்.

இந்நிலையில் சூஃபி நடனத்தை வரைந்துள்ள பிரபல ஓவியரும் இசைப்புயலைத்தான் தன்னுடைய ஓவியத்திற்கு இன்ஸ்பிரேஷனாக வைத்துள்ளார்.

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான்

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான்

இசைப்புயல் என்று அனைவராலும் சிறப்பாக கொண்டாடப்படுபவர் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான். சர்வதேச அளவில் இவர் தன்னை சிறப்பான இசையமைப்பாளராக நிலை நிறுத்தியுள்ளார். இசைப்புயலாக மட்டுமில்லாமல் ஆஸ்கர் நாயகனாகவும் இவர் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ஆஸ்கர் நாயகன்

ஆஸ்கர் நாயகன்

ஆஸ்கர் மேடைக்கு தமிழைக் கொண்டு சென்றவர் என்ற புகழையும் இவர் பெற்றுள்ளார். தொடர்ந்து 30 ஆண்டுகளை கடந்து திரைத்துறையில் இவரது பயணம் தொடர்ந்து வருகிறது. இவரை மற்றும் இவரது வெற்றிப் பயணத்தை உத்வேகமாக கொண்டு பல இளைஞர்கள் முன்னேறி வருகின்றனர்.

சிறப்பான இசைப்பயணம்

சிறப்பான இசைப்பயணம்

சென்னையில் இவரது இசைப்பள்ளியில் பலவகையான இசையை பலர் கற்றுத் தேர்ந்து வருகின்றனர். தொடர்ந்து கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை இவரது இசைப்பயணம் தொடர்ந்துதான் வந்துக் கொண்டிருக்கிறது. இரவு பகல் பாராமல் தன்னுடைய உழைப்பையும் இசை புலமையையும் மூலதனமாக கொண்டு நடைபோட்டு வருகிறார் இந்த இசைப்புயல்.

ஏஆர் ரஹ்மான் மகள் திருமணம்

ஏஆர் ரஹ்மான் மகள் திருமணம்

சமீபத்தில் இவரது மூத்த மகளின் திருமணம் வெகு விமரிசையாக நடந்து முடிந்துள்ளது. 50 ஆண்டுகளை கடந்துள்ள இவர் தோற்றத்தில் இன்னமும் இளமையாக இருப்பது அனைரையும் ஆச்சர்யம் கொள்ள செய்து வருகிறது. ஆனால் இவைக் குறித்தெல்லாம் கவலைக் கொள்ளாமல் தொடர்ந்து தன்னுடைய கேரியரில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் ஏஆர் ரஹ்மான்.

ஏஆர் ரஹ்மான் ஓவியம்

ஏஆர் ரஹ்மான் ஓவியம்

இந்நிலையில் இவரை இன்ஸ்பிரேஷனாக கொண்டு பிரபல ஓவியர் சந்தோஷ் நாராயணன் தற்போது சூஃபி நடனத்தை வரைந்துள்ளார். இந்த நடன ஓவியத்தை திருப்பிப் பார்த்தால் அங்குதான் சிறப்பான ட்விஸ்ட். ஓவியத்தை திருப்பிப் பார்த்தால் அதில் ஏஆர் ரஹ்மான் ஓவியம் காணப்படுகிறது.

ஓவியத்தை பகிர்ந்த இசைப்புயல்

ஓவியத்தை பகிர்ந்த இசைப்புயல்

இந்த ஓவியம் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்து வருகிறது. இந்த ஓவியத்தை பார்த்தவர்கள் அனைவரும் சந்தோஷ் நாராயணனுக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏஆர் ரஹ்மானும் இந்த ஓவியத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த சிறப்பான முயற்சிக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X