twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்.. 20 வருஷமாகிடுச்சு.. இன்னும் அந்த மேஜிக் மறையல.. ரஹ்மான் ட்வீட்!

    |

    சென்னை: இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் தல அஜித், மம்மூட்டி, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ், தபு நடிப்பில் வெளியான படம் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்.

    கடந்த 2000ம் ஆண்டு மே 4ம் தேதி இந்த படம் திரைக்கு வந்தது. நேற்றுடன் 20 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், இந்த படத்திற்கு ரம்மியமான பாடல்களை இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான், ராஜீவ் மேனனின் இன்ஸ்டா பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

    ஃபுல்லா பெயிண்ட்தான் போல.. நடிகையின் போட்டோவை பார்த்து மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்ஸ்!ஃபுல்லா பெயிண்ட்தான் போல.. நடிகையின் போட்டோவை பார்த்து மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்ஸ்!

    20 வருஷமாகிடுச்சு

    20 வருஷமாகிடுச்சு

    மல்டி ஸ்டார் படமான கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் திரைக்கு வந்து நேற்றுடன் 20 ஆண்டுகள் ஆகி விட்டது. அதன் நினைவலைகளை இயக்குநர் ராஜீவ் மேனன் மற்றும் அந்த படத்தின் மேல் தீரா காதல் கொண்டுள்ள அதன் ரசிகர்கள் என பலரும் பரிமாறி வருகின்றனர்.

    என்ன சொல்ல போகிறாய்

    என்ன சொல்ல போகிறாய்

    கொஞ்சும் மைனாக்களே, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், கண்ணாமூச்சு ஏனடா என் கண்ணா, எங்கே எனது கடிதம், என்ன சொல்ல போகிறாய், ஸ்மயாய் என அனைத்து ரஹ்மான் இசையில் அனைத்து பாடல்களுமே அந்த படத்தில் செம ஹிட் அடித்தன. அத்தனை பாடல்களுக்கும் இன்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

    தல அஜித்

    தல அஜித்

    தல அஜித் இப்படி ஒரு மல்டி ஸ்டாரர் படத்தில் இப்போது நடித்தால் எப்படி இருக்கும் என்பது பல ரசிகர்களின் கனவாக இருக்கிறது. அந்த அளவுக்கு அஜித் குமாரின் நடிப்பு இந்த படத்தில் ரசிகர்களை எப்போதுமே ஈர்க்கும் காந்தமாக இருந்து வருகிறது. கனவுகள் மற்றும் லட்சியத்துடன் போராடும் ஒவ்வொரு இயக்குநரின் உதாரணமாக அஜித் நடித்திருப்பார்.

    ஐஸ்வர்யா ராய்

    ஐஸ்வர்யா ராய்

    நடிகர் அஜித்துக்கு இந்த படத்தில் தபு ஜோடி என்றாலும், அப்பாஸை காதலித்து, அந்த காதலில் தோற்று, கால் இழந்த குடிகார மேஜரான மம்முட்டியை கரம் பிடிக்கும் நடிப்பில் நடிகை ஐஸ்வர்யா ராய் கதையின் நாயகியாக கலக்கி இருப்பார். கண்ணா மூச்சி ஏனடா? பாடலில் அவரது அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

    இசைப்புயல்

    இசைப்புயல்

    கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படம் வந்து 20 ஆண்டுகள் ஆனதை அறிந்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், இயக்குநர் ராஜிவ் மேனன் பதிவிட்டு இருந்த இன்ஸ்டாகிராம் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார். ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களும் அந்த எவர்க்ரீன் திரைக்காவியம் குறித்த பதிவுகளையும், ரஹ்மானின் இசை குறித்தும் பாராட்டி வருகின்றனர்.

    English summary
    AR Rahman shared Rajiv Menon instagram post about KanduKondain KanduKondain movie 20th anniversary which was celebrated yesterday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X