Don't Miss!
- Finance
அடுத்த அதிரடி.. அதானி குழுமம் வாங்கிய கடன் எவ்வளவு? வங்கிகளிடம் கேட்கிறது ஆர்பிஐ..!!
- Lifestyle
இரத்த அழுத்தம் & இதய நோய் ஆபத்தை ஏற்படுத்தும் உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்க இந்த உணவுகள் போதுமாம்!
- News
கருணாநிதி மீது நாங்க அளவுகடந்த அன்பு வச்சிருந்தோம்! அதனால் தான் இரவோடு இரவாக அதை செய்தோம் -அன்புமணி
- Automobiles
7 வருசம் கழிச்சு பெட்ரோல்/டீசல் வாகனம் ஓட்டுபவர்களை எல்லாம் பூமர் அங்கிள்னு கூப்டுவாங்க! இப்பவே உஷாராகிடுங்க
- Technology
கம்மி விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய Motorola போன்: அறிமுக தேதி இதுதான்.!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஏ.ஆர். ரஹ்மான்.. கர்ணன் பாணியில் வெளியான மாமன்னன் க்ளிம்ஸ்!
சென்னை: நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டு இயங்கி வரும் உதயநிதி ஸ்டாலினின் 45வது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாமன்னன் படத்தின் க்ளிம்ஸ் காட்சி தற்போது பிறந்தநாள் பரிசாக வெளியாகி உள்ளது.
அதில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ள நிலையில், அந்த வீடியோவை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
'’வாரிசு’’ விவகாரத்தில் நான் தலையிட முடியாது..நைசாக நழுவிய உதயநிதி ஸ்டாலின்!

உதயநிதி பிறந்தநாள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடினார். 1977ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி பிறந்தவர் உதயநிதி. இயக்குநர் கிருத்திகாவை மணந்து கொண்ட உதயநிதிக்கு இன்பநிதி மற்றும் தன்மயா என இரு குழந்தைகள் உள்ளனர். அரசியல், சினிமா மற்றும் தயாரிப்பு என படுபிசியாக வாழ்ந்து வருகிறார்.

ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து
காலை முதலே உதயநிதி ஸ்டாலினுக்கு ஏகப்பட்ட அரசியல்வாதிகளும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து சொன்ன நிலையில் தற்போது ஏ.ஆர். ரஹ்மான் ஒரு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

கர்ணன் மாதிரியே
பரியேறும் பெருமாள் படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி இருந்தார் மாரி செல்வராஜ். மாமன்னன் படமும் டோட்டலாக வேற ஜானர் படம் எனக் கூறப்பட்டது. அரசியல் கதைக்களத்துடன் உருவாகி உள்ள இந்த படத்தில் கர்ணன் படத்தில் தனுஷ் கத்தி உடன் நிற்பது போலவே உதயநிதியும் நிற்பது போன்ற காட்சிகள் இந்த க்ளிம்ஸில் இடம்பெற்றுள்ளன.

கீர்த்தி சுரேஷ் வாழ்த்து
மாமன்னன் படத்தை திரையில் காண ரொம்பவே ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்களுடன் பணிபுரிந்த அனுபவம் ரொம்பவே சந்தோஷத்தை கொடுத்தது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உதயநிதி என வாழ்த்து சொன்ன நடிகை கீர்த்தி சுரேஷ், மாமன்னன் படத்தை தாண்டி Behind the Screen காமெடிகளை பார்க்க ரொம்பவே ஆவலுடன் இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

ராஜ ராஜன்
"எங்கள் நிகழ் காலம் நீங்கள் தான், எங்கள் நிஜ முகமும் நீங்கள் தான், எங்கள் வருங்காலம் நீங்கள் தான், எங்கள் பொற்காலமும் நீங்கள் தான், எங்கள் ராஜ ராஜனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா படத்தின் தயாரிப்பாளர் எஸ்.பி. செளத்ரியும் தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.