twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலகிருஷ்ணாவுக்கு பதிலடி? ஏன் நடிக்கவில்லை.. இளையராஜாவின் பதிலை ஷேர் செய்த ஏஆர் ரஹ்மான்!

    |

    சென்னை: பாடல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் ஏன் சினிமாவில் நடிக்கவில்லை என்பது குறித்தும் இளையராஜா அளித்த பதிலை தனது டிவிட்டர் பக்கத்தில் ஏஆர் ரஹ்மான் ஷேர் செய்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோலொச்சி வருபவர் இசைஞானி இளையராஜா. இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    விஜய் ஆன்டனி பிறந்த நாள் பரிசாக ...அதிகார பூர்வ அறிவிப்பு பிச்சைக்காரன் 2 விஜய் ஆன்டனி பிறந்த நாள் பரிசாக ...அதிகார பூர்வ அறிவிப்பு பிச்சைக்காரன் 2

    தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் இசையமைத்துள்ளார். பல ஆல்பங்களையும் வெளியிட்டுள்ள இளையராஜா ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார்.

    ஏஆர் ரஹ்மானின் என்ட்ரி

    ஏஆர் ரஹ்மானின் என்ட்ரி

    கடந்த 40 வருடங்களாக தனது மெல்லிசையால் தமிழ் சினிமாவையும் இசை ரசிகர்களையும் கட்டிப் போட்டு வைத்துள்ளார். 90களில் ஏஆர் ரஹ்மான் என்ட்ரி கொடுத்தப் பிறகு தமிழ் சினிமா மாடர்ன் மியூஸிக் ஸ்டைலுக்கு மாறியது.

    இசையுலகின் ஜாம்பவான்கள்

    இசையுலகின் ஜாம்பவான்கள்

    ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதற்கு முன்பு இளையராஜாவிடம் உதவியாளராக பணியாற்றினார். இருவருமே இசை உலகில் ஜாம்பவான்களாக வலம் வந்தாலும் இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருந்து வருகிறது.

    அன்று மலர்ந்த மலரை போல்

    அன்று மலர்ந்த மலரை போல்

    இந்நிலையில் டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த இளையராஜா, பாடல் எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து பேசியுள்ளார். அதாவது ஒரு பாடல் கேட்கும் போதெல்லாம் அன்று மலர்ந்த மலரை போன்று இருக்க வேண்டும். மலர்கள் ஓரிரு நாட்களில் சறுகாகிவிடும்.

    மலரை போன்று இருப்பதால்தான்

    மலரை போன்று இருப்பதால்தான்

    ஆனால் பாடல்கள் எப்போதுமே ஃபிரஷாக அன்று மலர்ந்தது போன்றே இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் ரசித்து கேட்க முடியும். 20 வருடங்களுக்கு முந்தைய பாடல்களை மக்கள் இப்போதும் விரும்பி கேட்கிறார்கள் என்றால் அது அன்று பூத்த மலரை போன்று இருப்பதால்தான் என்று கூறியுள்ளார்.

    நானே முகத்தைக் காட்டக்கூடாது

    நானே முகத்தைக் காட்டக்கூடாது

    மேலும் ஏன் சினிமாவில் நடிக்கவில்லை? என்று கேள்வி கேட்கிறார்கள். நான் கேமராவில் முகத்தை காட்ட கூடாது என்று இருக்கிறேன். நாங்கள் பின்னணி இசைக் கலைஞர்கள். ரசிகர்கள் என்னை நினைத்துக்கொண்டு இருக்க வேண்டும். நானே என்னை பாருங்கள் என்று முகத்தை காட்டக்கூடாது. இசை கேட்கும்போது நான் ஞாபகத்துக்கு வந்தால் போதும் என்று கூறியுள்ளார்.

    பாலகிருஷ்ணா சர்ச்சை பேச்சு

    பாலகிருஷ்ணா சர்ச்சை பேச்சு

    இசைஞானி இளையராஜாவின் இந்த பேட்டியை தனது டிவிட்டர் பக்கத்தில் ரீட்வீ ட் செய்துள்ளார் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான். சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, ஏஆர் ரஹ்மானை யார் என்று தனக்கு தெரியாது என்றார்.

    திறமையாக வாயசைத்தேன்

    திறமையாக வாயசைத்தேன்

    மேலும் பத்து வருடத்துக்கு ஒரு ஹிட் கொடுப்பவர் என்றும் விமர்சித்தார். தொடர்ந்து இளையராஜாவை புகழ்வது போல் புகழ்ந்து பேசிய பாலகிருஷ்ணா, அவர் நன்றாக இசை அமைத்திருந்தாலும் தான் திறமையாக வாயசைத்தேன் என்று கூறி தற்பெருமை பேசிக்கொண்டார்.

    வறுபட்ட பாலகிருஷ்ணா

    வறுபட்ட பாலகிருஷ்ணா

    இதற்காக சமூக வலைதளங்களில் அவரை வறுத்தெடுத்தனர் நெட்டிசன்கள். இந்நிலையில் பாலகிருஷ்ணாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இளையராஜாவின் வார்த்தைகளை ஏஆர் ரஹ்மான் ஷேர் செய்துள்ளார் என கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

    தனுஷ் கமெண்ட்

    தனுஷ் கமெண்ட்

    ஏஆர் ரஹ்மான் ஷேர் செய்துள்ள இந்த பதிவை நடிகர் தனுஷ் லைக் செய்துள்ளார். மேலும் இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ரீட்வீ ட் செய்துள்ள தனுஷ், ட்வீ ட் மற்றும் ட்வீ ட்டில் என்ன இருக்கிறது.. இதுதான் என கமெண்ட் செய்துள்ளார்.

    English summary
    AR Rahman Shares Ilayaraja's words in his twitter page. Fans asking is it a response to Telugu actor Balakirshna?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X