பத்து தல படத்திற்கு ஓகே சொல்ல காரணம் யார் தெரியுமா? ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு!
சென்னை : சிம்பு, கௌதம் கார்த்தி நடித்துள்ள பத்து தல இசைவெளியீட்டு விழாவில் சிம்பு குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பேசியுள்ளார்.
விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு என சிம்புவின் படத்திற்குத் தொடர்ந்து இசையமைத்துப் பல ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். பல வெற்றிப்படங்களை கொடுத்த இந்த கூட்டணி மீண்டும் பத்து தல படத்தில் இணைந்துள்ளனர்.
பத்து தல திரைப்படத்தின் பாடல் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. படம் மார்ச் 30ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான்
பத்து தல இசைவெளியீட்டு விழாவில் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பத்து தல படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்டதற்கு முக்கிய காரணம் தம்பி சிம்பு தான். மற்றொரு காரணம் ஓபிலி கிருஷ்ணா. அவரிடம் ஒரு தனித்துவ இசை ஆர்வம் இருக்கிறது. சில்லுனு ஒரு காதல் படத்தில் வரும் முன்பே வா பாடல் சோகமா இருக்கு என்று சொன்னேன். ஆனால், அவர் இல்லை இந்த பாடல் நன்றாக வரும் என்றார். இத்தனை ஆண்டுக்கு பிறகும் அந்த பாடல் அனைவருக்கும் பிடித்த பாடலாக இருக்கு.

இதுதான் காரணம்
பத்து தல படத்தில், அக்கறையில பாடலை சிம்புவை பாடவைக்கலாம் என்று நினைத்தேன், ஆனால், அவர் தாய்லாந்து சென்றுவிட்டால், அந்த பாடலை நானே பாடிவிட்டேன் என்றார். மேலும், பத்து தல ஆல்பம் பற்றி ஒரே வார்த்தையில் மாஸ் என்று கூறி கை தட்டலை அள்ளினார்.

என்னுடைய இன்ஸ்பிரேஷன்
மேலும், தொடர்ந்து பேசிய ஏஆர்.ரஹ்மான், டி.ராஜேந்தர் இந்நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறார், அவர் என்னுடைய இன்ஸ்பிரேஷன். இளையராஜா, எம்.எஸ்.வி, கே.வி.மஹாதேவன் உள்ளிட்ட பலரிடம் நான் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால், டி.ராஜேந்தரிடம் வேலை பார்க்கும்போது அதுவரை இன்ட்ரோவர்ட்டாக இருந்த நான் அவர் வேலை செய்யும் ஸ்டைலை பார்த்து எக்ஸ்ட்ரோவர்டாக மாறினேன் என்றார்.

சேவ் லைட்மேன் ஃபண்ட்
மேலும், சினிமாவில் வேலைப்பார்க்கும் லைட்மேன்களுக்காக நாங்கள் ஒரு ஃபண்ட் நிறுவனத்தை தொடங்கி உள்ளோம். லைட் மேன்தான் சினிமாவில் வெளிச்சத்தை கொண்டு வருகிறார்கள். இதனால், அவர்களுக்காக 'சேவ் லைட்மேன் ஃபண்ட்'என ஃபண்ட் ஒன்றை தொடங்கி இருக்கிறோம். ஏன் என்றால், அவர்களுக்கென்று எந்த இன்சூரன்சும் இல்லாததால் அனைவரும் சேர்ந்து ஒரு வெப்சைட் தொடங்குகிறோம். அதனை சிம்பு திறந்து வைக்க வேண்டும் என்று சிம்புவை அழைத்தார். மேடையில் சிம்பு அந்த வெப்சைட்டை திறந்து வைத்தார்.


Click it and Unblock the Notifications











