தென்னிந்திய சினிமாவில் கருப்பானவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்… ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு !

சென்னை : தென்னிந்திய சினிமாவில் கருப்பாக இருப்பவர்களுக்கு நல்ல வலிமையான கதாபாத்திரத்தை கொடுங்கள் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

Recommended Video

கொட்டித்தீர்த்த AR Rahman | South India | Hindi Imposition | Oneindia Tamil

சென்னையில் சிஐஐ சார்பில் நடைபெற்ற தென்னிந்திய ஊடக பொழுதுபோக்கு கருத்தரங்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு ரஹ்மானை கௌரவித்தார்.

இதில் பேசிய ஏ.ஆர். ரஹ்மான், தென்னிந்திய இன்டஸ்ட்ரி என்பதால் ஆங்கிலத்தில் பேசுகிறேன் அனைவருக்கும் புரியும் என்று தனது பேச்சை தொடங்கினார். 7 வருடத்திற்கு முன்னாடி மலேஷியா போய் இருந்தேன் அங்கு ஒரு சீனரை சந்தித்தேன். அவர் இந்தியாவை பிடிக்கும் குறிப்பாக, வட இந்திய மக்கள், நடிகர்களை மிகவும் பிடிக்கும் அவர்கள் அனைவரும் வெள்ளையாக அழகாக இருப்பார்கள் என்றார்.

AR Rahman spoke on giving opportunity to black in South Indian cinema.

அப்போது, இவர் தென்னிந்திய படங்களை பார்த்தாரா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. என்னுடைய கருத்து, தென்னிந்திய படங்களில் கருப்பாக இருப்பவர்களுக்கு சிறந்த வலிமையான கதாபாத்திரங்களை கொடுங்கள். நம் அனைவருக்கும் நம்முடைய நிறம் தான் பிடிக்கும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் பேசி முடித்தார்.

இந்நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்த ஏ.ஆர்.ரஹ்மானிடம் இந்தி தான் இணைப்பு மொழி என அமித் ஷா கூறியதை பற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு பதலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் தான் இணைப்பு மொழி என ஒரு வார்த்தையில் பதிலளித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

நாம் உழைப்பதால் வட இந்தியர்களுக்கு நன்மை கிடைக்கிறது. வட இந்தியர்கள் உழைப்பதால் தென் இந்தியர்கள் நலம் பெறுகிறார்கள், இதுதான் வேற்றுமையில் ஒற்றுமை. வேற்றுமையில் ஒற்றுமைக்கான அவசியமான நேரம் இது. . ஒரே இந்தியா நாடு தான். வட இந்தியா, தென்னிந்தியா என்றில்லை என்று கூறியுள்ளார்.

அப்போது, இவர் தென்னிந்திய படங்களை பார்த்தாரா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. என்னுடைய கருத்து, தென்னிந்திய படங்களில் கருப்பாக இருப்பவர்களுக்கு சிறந்த வலிமையான கதாபாத்திரங்களை கொடுங்கள். நம் அனைவருக்கும் நம்முடைய நிறம் தான் பிடிக்கும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் பேசி முடித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X