விஜய்யை தொடர்ந்து சிம்புவுக்காக சீனில் வரும் ஏஆர் ரஹ்மான்... பத்து தல படத்தில் இப்படி ஒரு சம்பவமா?

சென்னை: சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கடந்த 3ம் தேதி இந்தப் படத்தின் முதல் பாடல் ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியானது.

இதனைத் தொடர்ந்து பத்து தல ட்ரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே, சிம்புவுக்காக இந்தப் படத்தில் ஏஆர் ரஹ்மானும் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

பத்து தல ப்ரோமோஷன்

பத்து தல ப்ரோமோஷன்

சிம்புவின் பத்து தல திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. கடந்தாண்டு டிசம்பர் மாதமே வெளியாகியிருக்க வேண்டிய இந்தப் படம் தற்போது மார்ச் 30ம் தேதி ரிலீஸாகிறது. ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் கிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசைமைத்துள்ளார். இதனிடையே சில வாரங்களுக்கு முன்னர் ஷூட்டிங்கை முடித்த படக்குழு, பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட்டு ப்ரோமோஷனை தொடங்கியது.

விரைவில் இசை வெளியீட்டு விழா

விரைவில் இசை வெளியீட்டு விழா

ஏஜிஆர் என்ற கேங்ஸ்டராக சிம்பு நடித்துள்ள பத்து தல, கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த முஃப்தி படத்தின் தமிழ் வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் ஆக்‌ஷன் ட்ரீட்டில் வெளியான முஃப்தி, தமிழில் பத்து தலயாக பாக்ஸ் ஆபிஸில் அவதாரம் எடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், கேங்ஸ்டராக மிரட்டியுள்ள சிம்புவுக்கு இந்தப் படம் தரமான கம்பேக் கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பத்து தல இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவுக்காக ஏஆர் ரஹ்மான்

சிம்புவுக்காக ஏஆர் ரஹ்மான்

அதன்படி, பத்து தல படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழா மார்ச் 18ம் தேதி நடைபெறும் எனக் கூறப்படுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் அல்லது தனியார் கல்லூரியில் நடக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே இந்தப் படத்தில் சிம்புவுக்காக ஏஆர் ரஹ்மானும் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பத்து தல படத்திற்கான ப்ரோமோ வீடியோவாக இது இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏஆர் அமீன் குரலில் பாடல்

ஏஆர் அமீன் குரலில் பாடல்

மேலும், சிம்புவுக்காக தான் பத்து தல படத்தின் ப்ரோமோ வீடியோவில் ஏஆர் ரஹ்மான் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக விஜய்யின் பிகில் படத்தில் முகம் காட்டியிருந்தார் ஏஆர் ரஹ்மான். இந்தப் படத்தில் சூப்பர் ஹிட் அடித்த சிங்கப் பெண்ணே பாடலில் விஜய், அட்லீயுடன் ஏஆர் ரஹ்மானும் ஒரு காட்சியில் மாஸாக என்ட்ரி கொடுத்திருப்பார். இந்த காட்சி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது அதேபோல் பத்து தல படத்தில் ஒரு சீனில் மாஸ் காட்டப் போகிறாராம் ஏஆர் ரஹ்மான். அதுமட்டும் இல்லாமல் இந்தப் படத்தின் ஒரு பாடலை ஏஆர் அமீன் பாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தரமான சம்பவங்கள்தரமான சம்பவங்கள்

தரமான சம்பவங்கள்தரமான சம்பவங்கள்

பத்து தல படத்தில் இருந்து வெளியான 'நம்ம சத்தம்' என்ற முதல் பாடலை ஏஆர் ரஹ்மான் பாடியிருந்தார். சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான இந்தப் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற இன்னொரு பாடலை ரஹ்மானின் மகன் ஏஆர் அமீன் பாடியுள்ளதாகவும் தற்போது தகவல் கிடைத்துள்ளது. ஓக்கே கண்மணி படத்தில் 'மவுலானா' பாடல் மூலம் திரை பாடகராக அறிமுகமானவர் ஏஆர் அமீன். சமீபத்தில் ரசிகர்களிடம் அதிக கவனம் ஈர்த்து வரும் அமீன், சிம்புவுக்காகவும் குரல் கொடுத்துள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X