சர்கார் விழாவில் ரஹ்மான் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்
சென்னை: இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மான் சர்கார் இசை வெளியீட்டு விழாவில் ஒரு சர்ப்ரைஸ் வைத்துள்ளார்.
சர்கார் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று மாலை தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

சிம்டாங்காரன் மற்றும் ஒரு விரல் புரட்சி ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மீதமுள்ள மூன்று பாடல்கள் இன்று வெளியிடப்பட உள்ளன.
மோஹித் சௌஹான் பாடியுள்ள "டாப் டக்கர்" என்ற பாடல், சித் ஸ்ரீராம் ஜோனிதா காந்தி பாடியிருக்கும் "ஓ மைகாட் பொண்ணு" மற்றும் நகுல், பிளாஸ் இணைந்து பாடியுள்ள "சிஇஓ இன் த ஹவுஸ்" ஆகிய மூன்று பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட உள்ளன.
இந்த நிகழ்வில் ரஹ்மான் சிறப்பான ஒரு சர்ப்ரைஸ் தர உள்ளார். தமிழின் பாரம்பரிய இசை, அதன் வரலாற்றுப் பின்னணி குறித்த வீடியோவை வெளியிட இருக்கிறார்.
இதற்கு முன்பு இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று அங்குள்ள இசைக்கருவிகள் பற்றி சம்பந்தப்பட்ட இசைக்கலைஞர்களுடன் உரையாடி அதை "ஹார்மனி" என்ற பெயரில் வெளியிட்டார். அது நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது தமிழின் பாரம்பரிய இசை குறித்து வீடியோ வெளியிட உள்ளார்.


Click it and Unblock the Notifications











