கடைசியா ரஹ்மானையே காண்டாக்கிட்டீங்களே.. ரீமிக்ஸ் பாடலால் கோபத்தின் உச்சிக்கே சென்ற இசைப்புயல்!
சென்னை: மசக்கலி 2.0 என்ற பெயரில் ஏ.ஆர். ரஹ்மானின் 'டெல்லி 6' பாடல் நேற்று ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.
Recommended Video
இந்த ரீமிக்ஸ் வெர்ஷனை கேட்ட ரசிகர்கள் பலரும், ஏன் டா இப்படி இந்த பாடலை கெடுத்து வச்சிருக்கீங்க என திட்டித் தீர்த்து வந்தனர்.
இந்நிலையில், ஒரிஜினல் வெர்ஷனை கேளுங்க என ரீமிக்ஸ் பாடலுக்கு எதிராக ரொம்ப காட்டமான ட்வீட் ஒன்றை ஏ.ஆர். ரஹ்மான் பதிவிட்டுள்ளார்.
மசக்கலி பாடல்
அபிசேக் பச்சன், சோனம் கபூர் நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான படம் டெல்லி 6. ராக்கேஷ் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் வெளியான அந்த படம் ஓடவில்லை என்றாலும், அந்த படத்தின் ஆல்பம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மசக்கலி பாடல் இந்தியா முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது.
வெர்ஷன் 2.0
இந்நிலையில், டி சீரிஸ் நிறுவனம் மசக்கலி பாடலின் ரீமிக்ஸ் வெர்ஷனை நேற்று வெளியிட்டது. சித்தார்த் மல்கோத்ரா, தாரா சுதாரியாவும் அந்த பாடலில் நடித்து இருந்தனர். அந்த பாடலை கேட்ட ரசிகர்கள் நல்ல பாடலை ஏன் இப்படி வீணடிக்கின்றீர்கள் என டி சீரிஸ் நிறுவனத்தை சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றினர்.
கடுப்பான ரஹ்மான்
எந்தவொரு நிலையிலும், ஏ.ஆர். ரஹ்மான் கோபத்தை கட்டுப்படுத்தி வந்த நிலையில், அவரையே சற்று கடுப்பேற்றி உள்ளது இந்த மசக்கலி ரீமிக்ஸ் பாடல். தனது ட்விட்டர் பக்கத்தில், எந்த குறுக்கு வழியும் இல்லாமல், 200க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களால் பல இரவுகள் தூக்கமின்றி உருவாக்கப்பட்ட பாடல் இது, தயவு செஞ்சு ஒரிஜினலையே கேளுங்கள் என பதிவிட்டுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
தரமான சம்பவம்
ஏ.ஆர். ரஹ்மான் இப்படி இதற்கு முன்பாக கோபப்பட்டு பதிவிட்டதை பார்த்திராத இசைப்புயலின் ரசிகர்கள், சரியான பதிலடி கொடுத்து இருக்கீங்க ரஹ்மான் என்றும், டி சீரிஸ் நிறுவனத்துக்கும், அந்த பாடலை ரீமிக்ஸ் செய்த குழுவுக்கும் சிறப்பான தரமான பதிலடி என ரசிகர்கள் பதிவிட்டு ரஹ்மானின் கருத்தை ஆதரித்து வருகின்றனர்.
பாட்ட கொன்னுட்டானுங்க
"தலைவா இப்போ தான் அந்த remake version கேட்டுட்டு வரேன் நியாயமா பார்த்தா நீங்க அவனுங்கள செருப்பால அடிச்சு இருக்கணும்...பாட்ட கொன்னுட்டானுங்க" என ஏ.ஆர். ரஹ்மானின் தீவிர ரசிகர்கள் தொடர்ந்து அவரது ட்வீட்டுக்கு கீழே ஆதரவு தெரிவித்தும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டும் வருகின்றனர்.
கோபத்தை அடக்குபவனே
ட்வீட்டரில் இப்படியொரு தரமான சம்பவத்தை ஏ.ஆர். ரஹ்மான் செய்தது மட்டுமின்றி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நெருப்பு கக்கும் மனித புகைப்படத்தை பதிவிட்டு, கோபத்தை அடக்கத் தெரிந்தவனே இந்த உலகில் வலிமையான மனிதன் என்ற பதிவையும் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











