99 சாங்ஸ்… ஏ.ஆர்.ரஹ்மானின் சுவாரஸ்யமான பதிலுடன் கலக்கல் பேட்டி !
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான். கதை எழுதி, இசையமைத்து தயாரித்துள்ள 99 சாங்ஸ் திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
2021 ஏப்ரல் 16 அன்று இந்தியா முழுவதும் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.
ஜியோ ஸ்டூடியோஸால் வெளியிடப்படவுள்ள இத்திரைப்படத்தை ரஹ்மானின் தயாரிப்பு நிறுவனமான ஒய் எம் மூவிஸ் ஐடியல் என்டெர்டைன்மென்டுடன் இணைந்து தயாரித்துள்ளது.

விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி
ரஹ்மானின் முதல் தயாரிப்பான இந்த படத்தில் தி தேவாரிஸ்ட்ஸ் மற்றும் பிரிங் ஆன் தி நைட் புகழ் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்குகிறார். 99 சாங்ஸ் திரைப்படத்தின் மூலம் ஏஹன் பட்டை ரஹ்மான் நடிகராக அறிமுகப்படுத்துகிறார். இவருக்கு ஜோடியாக எடில்ஸி வர்காஸ் நடிக்கிறார்.

காதலிக்காக 100 பாடல்
இப்படம் குறித்து பேட்டி அளித்துள்ள ஏஆர்.ரஹ்மான் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். ஒரு நாள் விமானத்தில் வந்த போது தான் எனக்கு இந்த கதை யோசனை வந்தது. ஒரு பையன் ஒரு பெண்ணை உயிருக்கு மேலாக காதலிக்கிறான். அந்த பெண்ணை அடைவதற்கு அவன் 100 பாடல்களை எழுதுகிறார் இதுதான் படத்தின் மையக்கரு இதில் இருந்து தான் படத்தின் கதை தொடங்குகிறது என்றார்.
Recommended Video

வித்தியாசமானது
உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தைத்தான் திரைப்படமாக எடுத்துள்ளீர்களா என்ற கேள்விக்கு, இல்லை , என் வாழ்க்கை கதை முற்றிலும் வித்தியாசமானது. நான் இசைத் துறையில் தான் செல்ல வேண்டும் என என் அம்மா விரும்பினார்கள். ஆனால், பொது வாழ்வில் யாரும் தங்கள் பிள்ளைகளிடம் இப்படி கூற மாட்டார்கள். வேலைக்கு செல்லும்படித்தான் கூறுவார்கள் என்றார்.

வெற்றியைத் பொருத்துத்தான்
நிறைய தமிழ் கதைகளை எழுதி வைத்துள்ளேன், முதலில் இந்த படம் எப்படி மக்களை சென்றடைகிறது என்பதை பார்த்து விட்டு, அதற்குப்பிறகு அடுத்ததைப்பற்றி யோசிப்பேன். இந்த படத்தின் வெற்றியைப் பொருத்துத்தான் எல்லாமே அமைந்துள்ளது என்று அழகாக பதிலளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











