பொன்னியின் செல்வன் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு!

சென்னை: கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்து வருகிறார் மணிரத்னம். இது மணிரத்னத்தின் கனவுப் படமாகும்.

இந்த படத்தில் கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, விக்ரம், பேபி சாரா, த்ரிஷா என முன்னனி நடிகர்களின் பட்டாளமே நடிக்கிறது.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

கனவு திரைப்படம்

கனவு திரைப்படம்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்னும் வரலாற்று நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது இயக்குனர் மணி ரத்னத்தின் நீண்ட நாள் கனவு. இந்த திரைப்படம் இந்தியாவில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் வெளியாகவுள்ளது.

இரண்டு பாகம்

இரண்டு பாகம்

இந்த திரைப்படம் பெரிய பொருட்செலவில் இந்தியா & வெளிநாடுகளில் படமாகப்பட்டு வருகிறது. 800 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக இந்த வரலாற்று திரைப்படம் வெளிவரவுள்ளது. இது தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக இருக்கும்.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் 70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் 2022ம் ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் முன்னர் தகவல்கள் வெளிவந்தன. அதுவும் இந்தியாவில் கொரோனா பரவலின் நிலவரம் பொறுத்தே படம் வெளியாகும் என தெரிவித்தனர்.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் பொன்னியின் செல்வன் குறித்து ட்விட்டரில் ரசிகர்கள் உடனான கலந்துரையாடலில், மணிரத்னம் திரைப்படத்தை கலை ரீதியாக சிறப்பாக கையாண்டுள்ளார் என தெரிவித்துள்ளார். இந்த செய்தி ரசிகர்களிடம் ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X