twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரேயொரு கேள்வி கேட்டு நெட்டிசன்களின் தலைமுடியை பிச்சுக்க வைத்த ரஹ்மான்

    By Siva
    |

    Recommended Video

    ஒரேயொரு கேள்வி கேட்டு நெட்டிசன்களின் தலைமுடியை பிச்சுக்க வைத்த ரஹ்மான்- வீடியோ

    சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கேட்ட ஒரேயொரு கேள்விக்கு சரியான பதில் தெரியாமல் நெட்டிசன்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் என்ன தெரிவித்தாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடுகிறது. அதிலும் குறிப்பாக இந்தி திணிப்புக்கு எதிராக ரஹ்மான் போட்ட ட்வீட்டை பார்த்து பாராட்டாதவர்களே இல்லை.

    AR Rahman teases tweeples with a video

    இந்நிலையில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இது யார் என்று அடையாளம் தெரிகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அந்த வீடியோவில் நடந்து வருவது உங்களின் மகன் குட்டி இசைப்புயல் ஏ.ஆர். அமீன் என்று சில நெட்டிசன்களும், எங்க தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் என்று விஜய் ரசிகர்களும் தெரிவித்துள்ளனர்.

    இதுக்கு நீங்க ரெடின்னா, நடிக்க நான் ரெடி: இயக்குநர்களிடம் பளிச்சென்று கூறும் நடிகை இதுக்கு நீங்க ரெடின்னா, நடிக்க நான் ரெடி: இயக்குநர்களிடம் பளிச்சென்று கூறும் நடிகை

    அந்த வீடியோவில் முகம் சரியாகத் தெரியவில்லை. அதனால் அது அமீனா, ஜேசனா என்பதை தெளிவாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. சார், முடியல சார், நீங்களே அது யார் என்று சொல்லிவிடுங்கள் என்று நெட்டிசன்கள் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

    அமீன் அல்லது ஜேசன் என்று கூறினால் கூட பரவாயில்லை ஒரு சில விஜய் ரசிகர்களோ அது எங்களின் தளபதி என்று அநியாயத்திற்கு பொய் சொல்லியுள்ளனர். முகம் சரியாகத் தெரியவில்லையே தவிர அது அரும்புமீசை வைத்திருக்கும் பையன் என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படி இருக்கும்போது விஜய் என்று சொல்வது எல்லாம் டூ டூ மச்.

    இதற்கிடையே சில விஜய் ரசிகர்களோ, ரஹ்மான் சார் தளபதி 63 அப்டேட் ஏதாவது கொடுக்க மாட்டீர்களா என்று பாவம் போன்று கேட்டுள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் தான் இசையமைத்து வருகிறார்.

    படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். அப்படி இருந்து அதற்கு முன்பு ஏதாவது அப்டேட் கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தில் உள்ளனர் விஜய் ரசிகர்கள்.

    English summary
    AR Rahman teases tweeples with a video asking them to identify the person.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X