பிரபல ஹீரோவின் படத்தை இசை அமைத்து தயாரிக்கும் ஏ.ஆர்.ரகுமான்.. ஆஸி, அமெரிக்காவில் ஷூட்டிங்!

By

சென்னை: பிரபல ஹீரோ நடிக்கும் நோ லேண்ட்ஸ் மேன் என்ற படத்துக்கு இசை அமைத்து இணை தயாரிப்பு செய்கிறார், ஏ.ஆர்.ரகுமான்.

Recommended Video

தமிழ்ப் பாடலுக்கு பாலிவுட் ஹீரோயின் டான்ஸ்! - வீடியோ

தமிழில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த 'பேட்ட' படத்தில் வில்லனாக நடித்தவர், பிரபல இந்தி நடிகர் நவாஸூதின் சித்திக்.

இந்தியில் தேவ்டி, பீப்ளி லைவ், கஹானி, பாம்பே டாக்கீஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் பரபரப்பு

பாலிவுட்டில் பரபரப்பு

சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் பயோபிக்கான தாக்கரே, மவுன்டேன் மேன் என்றழைக்கப்படும் மன்ஜியின் வாழ்க்கை கதை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனிக்கப்பட்டார். பாலிவுட் ஹீரோவாக இவரது மனைவி சமீபத்தில் விவாகரத்து கோரி இருந்தது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

பங்களாதேஷ் இயக்குனர்

பங்களாதேஷ் இயக்குனர்

நவாஸூதின் சித்திக், இப்போது, 'நோ லேண்ட்ஸ் மேன்' என்ற படத்தில் நடித்துள்ளார். இது, அமெரிக்கா, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் கூட்டுத் தயாரிப்பாக உருவாகும் படம். பிரபல பங்களாதேஷ் இயக்குனர், முஸ்தஃபா சர்வார் ஃபரூக்கி இயக்குகிறார். இவர் இந்தியா, பங்களாதேஷ் கூட்டுத் தயாரிப்பாக உருவான, டூப்: நோ பெட் ஆஃப் ரோசஸ் என்ற படத்தை இயக்கியவர்.இதில் இர்பான் கான் நடித்திருந்தார்.

இணை தயாரிப்பாளர்

இணை தயாரிப்பாளர்

இந்நிலையில் 'நோ லேண்ட்ஸ் மேன்' படத்தின் இசை அமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் அந்த படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இணைந்துள்ளார். அமெரிக்காவில் பயணப்படும் தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர், ஆஸ்திரேலியப் பெண் ஒருவரைச் சந்திக்கிறார். இதற்கு பிறகு அவர் பயணம் சிக்கலாகிறது. ஏன், எப்படி என்பது கதை.

மேகன் மிட்செல்

மேகன் மிட்செல்

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் ஆஸ்திரேலிய நாடக நடிகை மேகன் மிட்செல் உட்பட பலர் நடிக்கின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தடைபட்டுள்ளன. 'இந்தப் படத்தின் படப்பிடிப்பு சவாலாக இருந்தது. ஆனாலும் அது நிறைவேறியது. ஏ.ஆர்.ரகுமானின் புத்திசாலித்தனம் இந்த படத்தை இன்னும் உயரத்துக்கு கொண்டு செல்லும்' என்று தெரிவித்துள்ளர் நவாஸூதின் சித்திக்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X