சிம்பு.. கௌதம் மேனன்.. ஏ.ஆர். ரஹ்மான்.. 3வது முறையாக இணையும் வெற்றி கூட்டணி!
சென்னை: சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்தனர்.
காமன் DP, மாநாடு டீசர், படத்தின் அறிவிப்புகள் என சிம்பு ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டமாக அமைந்தது.
இத்துடன் சிம்பு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ஒரு வெற்றி கூட்டணி மீண்டும் ஒன்றிணைந்து மகிழ்ச்சி அளித்துள்ளது.

ரசிகர்களின் பேராதரவு
கவுதம் மேனன் - சிம்பு - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் முதல் முறையாக வெளியான படம் "விண்ணைத்தாண்டி வருவாயா". 2010ம் ஆண்டு வெளியாகிய படம் என்றாலும் இன்று வரையில் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் படைப்பாகவே உள்ளது விண்ணைத்தாண்டி வருவாயா.

தொடர் வெற்றி
இவர்களின் கூட்டணி மீண்டும் 2016ம் ஆண்டு
"அச்சம் என்பது மடமையடா" படத்தில் ஒன்றிணைந்தது.
ஏ.ஆர். ரஹ்மானின் இசை படத்தில் பெரிதும் பாராட்டப்பட்டு படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தொடர் வெற்றியாக அமைந்தது.

ஹாட்ரிக்கை நோக்கி
இதைத்தொடர்ந்து இந்த கூட்டணி ஹாட்ரிக் வெற்றியை நோக்கி மீண்டும் இணைகிறது. Vels Film International இந்த படத்தை தயாரிக்கிறது. சிம்புவின் பிறந்தநாளன்று இது குறித்து கவுதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இது மட்டுமன்றி சிம்பு நடிப்பில் மாநாடு, அட்மான், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஒரு படம், இயக்குனர் ராமுடன் ஒரு படம் என படங்கள் வரிசை கட்டி வெளிவர உள்ளது. அடுத்தடுத்த அறிவிப்புகளை சிம்பு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











