ஏ.ஆர். ரஹ்மான் முதல் சிவகார்த்திகேயன் வரை.. 74வது சுதந்திர தினத்துக்கு பிரபலங்கள் வாழ்த்து!

சென்னை: 74வது சுதந்திர தின விழா சமூக விலகலோடு பாதுகாப்பான முறையில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு என ஏகப்பட்ட திரை பிரபலங்கள் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அன்பை பரப்புங்கள்

அன்பை பரப்புங்கள்

இந்தியாவில் இன்று 74வது சுதந்திர தினம் கோலகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வீடியோ ஒன்றை வெளியிட்டு, தனது சுதந்திர தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். ஜெய் ஹோ என்றும் ஜெய் ஹிந்த் என்றும் இறுதியில் கூறும் அவர், நாட்டு மக்கள் அன்பை அதிகமாக பரப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

உலகநாயகன்

உலகநாயகன்

"74வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம். கொரோனா தொற்றிலிருந்தும், பசி, வறுமை, ஊழல், பிரித்தாளும் சக்திகள் இவற்றிடமிருந்தும், நாடும் தமிழகமும் விடுதலையடைய உழைப்போம். வளமான வாழ்க்கை அனைவருக்கும் என்ற நம் கனவு நனவாகட்டும். ஜெய்ஹிந்த்." என வாழ்த்தி உள்ளார்.

சகோதர சகோதரிகளுக்கு

சகோதர சகோதரிகளுக்கு

நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் சார்பாக, அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் ரசிகர்கள், அவரது ட்வீட்டுக்கு கீழே அவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மூவர்ண கொடி

மூவர்ண கொடி

தல அஜித்தின் என்னை அறிந்தால், பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக, உலக நாயகனின் உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகை பார்வதி நாயர், தனது வெள்ளை சுடிதாருக்கு, சால்வையாக மூவர்ண கொடி டிசைன் கொண்ட ஷாலை போட்டுக் கொண்டு, நாட்டுப்பற்றுடன் ஏகப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தேசியக் கொடியுடன்

தேசியக் கொடியுடன்

பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, தனது கைகளில் தேசியக் கொடியை ஏந்தியபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு, சுதந்திர தின வாழ்த்துக்களை தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார். மேலும், நாட்டுக்காக போராடும் வீரர்களை இந்த நாளில் நினைத்து போற்ற வேண்டும் என்றும் கேப்ஷன் போட்டுள்ளார்.

சமந்தா வாழ்த்து

சமந்தா வாழ்த்து

கோலிவுட், டோலிவுட் என கலக்கி வரும் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சுதந்திர தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும், சுதந்திரம் என்பது என்ன வென்றால், நினைத்ததை செய்வது அல்ல சுதந்திரம், சரியானதை சரியாக செய்வதே சுதந்திரம் என அதற்கு அர்த்தத்தையும் கொடுத்துள்ளார்.

கொடுப்பதல்ல சுதந்திரம்

கொடுப்பதல்ல சுதந்திரம்

நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ஓவியா, தனது ட்விட்டர் பக்கத்தில் சுதந்திர தினம் குறித்த பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தத்துவ வார்த்தையான, "சுதந்திரம் என்பது கொடுப்பதல்ல.. பெறுவது தான்" என்பதை பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X