ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நேரடியாக பேசுங்கள்.. குஷியில் ரசிகர்கள்
சென்னை : இசைபுயுல் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாளான இன்று ரசிகர்களுடன் நேரலையில் கலந்துரையாடி வருகிறார்.
இந்த தகவலை ஏஆர்.ரஹ்மான் தனது விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஏஆர்.ரஹ்மான் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஏகத்திற்கும் குஷியாகி அவரை நேரலையில் சந்திக்க தயாராகி உள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான்
சின்ன சின்ன ஆசை...சிறகடிக்க ஆசை... என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் தான் ஏ.ஆர்.ரஹ்மான். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்து இசை புயலாக உருவெடுத்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஆஸ்கார் விருது
தமிழ், மலையாளம், இந்தி படங்களுக்கு மட்டுமின்றி, ஆங்கிலம், சீன மொழி படங்களுக்கும் இசையமைத்து, பெரும் புகழ் பெற்றார். 5. ஸ்லம்டாக் மில்லியினர் திரைப்படத்திற்கு மிகச்சிறந்த இசையமைத்ததற்காக உலக அளவில் திரைத்துறையில் உயரிய விருதான ஆஸ்கார் விருதை வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தார்.

பல விருதுகள்
6 தேசிய விருதுகள், 32 பிலிம்பேர் விருதுகள், 11 IIFA விருதுகள், 2 ஆஸ்கர் விருதுகள், பாப்தா, கிராமி விருதுகள் என சர்வதேச அளவில் இசைக்காக வழங்கப்படும் எண்ணற்ற விருதுகளையும் பெற்று இசையின் ஜாம்பவானாக விளங்கி வருகிறார்.

பிறந்த நாள்
ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரஹ்மானின் தீவிர ரசிகர்கள் தங்களது வாட்ஸ் அப் ஸ்டேடஸ் சமூகவலைத்தள பக்கங்களில் அவர் இசையமைத்த பாடல்களை தெறிக்கவிட்டு வருகின்றன.

நேரலையில்
இந்நிலையில், ஏ.ஆர்ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில். உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி. இன்று மாலை 6 மணிக்கு யூடியூப் நேரலையில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் உங்களின் சில கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிக்கிறேன். என பதிவிட்டுள்ளார்.

குஷியில் ரசிகர்கள்
ஏ.ஆர் ரஹ்மான், பொது நிகழ்ச்சியில் அதிகம் பேசியது இல்லை. எப்போதும் ஒரு விதமான புன்னகையுடனே அனைத்தையும் கடந்து சென்றுவிடுவார். பிறந்த நாளான இன்று, நேரலையில் பேசுவதாக கூறி உள்ளதால், அவரின் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











