ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள்... யாரெல்லாம் வாழ்த்து சொல்லியிருக்காங்கனு பாருங்க!
சென்னை : ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
துள்ளல் இசை , மெலோடி இசை என அனைத்திலும் பின்னி எடுக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த நாளை அவரின் தீவிர ரசிகர்கள், அவர் இசையமைத்த பாடல்களை இணையத்தில் பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
மேலும், அவருக்கு மோகன்லால், அனிருத்,ஜெயம் ரவி, ஆர்யா என திரைப்பிரபலங்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

ஐ லவ் யூ சார்
இளம் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ரஹ்மான் சார் என்று பதிவிட்டுவிட்டு ஐ லவ் யூ கூறி ஹர்டினை பதிவிட்டுள்ளார்.

மோகன்லால்
நடிகர் மோகன்லால் தனது சமூகவலைத்தள பக்கத்தில். இசை ஜாம்பவான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். மேலும், எங்கள் வரவிருக்கும் ஆராட்டு திரைப்படத்தில் நீங்கள் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. மகிழ்ச்சியும் வெற்றியும் நிறைந்த ஆண்டாக அமையட்டும். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் . என பதிவிட்டுள்ளார்.

நடிகர் ஆர்யா
நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர் ரஹ்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்து இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துவதாக பதிவிட்டுள்ளார்.

தேவி ஸ்ரீ பிரசாத்
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் இசை புயல் ஏ.ஆர் ரஹ்மானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அதில் பகிர்ந்துள்ளார்.

நடிகை மஞ்சுமா மோகன்
நடிகை மஞ்சுமா மோகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். இவர் தமிழில் அறிமுகமான அச்சம் என்பது மடமையடா திரைப்படத்திற்கு ஏ.ஆர்ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இத்திரைப்படம் வெற்றி பெறவில்லை என்றாலும் இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ஹிட்டடித்தன.

ஜெயம் ரவி
அதேபோல நடிகர் ஜெயம் ரவியும் தனது சமூகவலைத்தள பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











