சுஷாந்தின் புது படம்.. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகுது.. ரஹ்மான் போட்ட #DilBechara டிவீட்!

சென்னை: மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் உருவாகி உள்ள DilBechara திரைப்படம் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது என ஏ.ஆர். ரஹ்மான் டிவீட் போட்டுள்ளார்.

டிவி நடிகராக இருந்து பாலிவுட்டின் நெபோடிஸத்திற்கு நடுவே கடும் போராட்டங்களை சந்தித்து, தனது திறமையால் முன்னணி ஹீரோவாக மாறிய சுஷாந்த், கடந்த ஜூன் 14ம் தேதி தற்கொலை செய்துக் கொண்டு இறந்தார்.

அவரது மரணம் பாலிவுட்டை கடந்து, இந்திய ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் உண்டாக்கியது.

ரசிகர்கள் குற்றச்சாட்டு

ரசிகர்கள் குற்றச்சாட்டு

சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு பாலிவுட் பிரபலங்களால் பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும், அவர் நடிக்க வேண்டிய பல படங்களில் வாரிசு நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் ஆதாரத்துடன் பாலிவுட் ரசிகர்கள் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர். மேலும், நெபோடிஸம் தான் அவரது மன அழுத்தத்திற்கு காரணம் என்றும் சொல்கின்றனர்.

உச்சத்தில் இருந்த நடிகர்

உச்சத்தில் இருந்த நடிகர்

பட வாய்ப்புகள் கிடைக்காததால் மன அழுத்தத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்தார் என்றால், அதை தாங்கள் நம்ப மாட்டோம் என்றும், அவர் அளவுக்கு உச்சத்தில் இல்லாத பல நடிகர்களும், அந்த முடிவை எடுக்காத நிலையில், அவர் அப்படி முடிவெடுத்து இருந்தார் என்றால் அது அவர் செய்த தவறு என ராம் கோபால் வர்மா மற்றும் பாக்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

சுஷாந்த் சிங் படம்

சுஷாந்த் சிங் படம்

கடந்த ஜூன் 14ம் தேதி சுஷாந்த் சிங் உயிரிழந்த நிலையில், அவர் நடிப்பில் உருவாகி இருந்த Dil Bechara திரைப்படம் வரும் ஜூலை மாதம் 24ம் தேதி ரிலீசாகப் போவதாக தற்போது அறிவிப்புகள் வெளியாகி வைரலாகின்றன. முகேஷ் சப்ரா இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், சைஃப் அலி கான், சஞ்சனா சங்கி நடிப்பில் இந்த படம் உருவாகி இருக்கிறது.

ரஹ்மான் டிவீட்

ரஹ்மான் டிவீட்

இந்த படத்திற்கு இசையமைத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் வரும் ஜூலை 24ம் தேதி மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தில் பெச்சாரா திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக ரிலீஸ் ஆகப் போவதாக டிவீட் போட்டு அறிவித்துள்ளார். ஆனால், இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் மேலும், சோகத்திலேயே மூழ்கி போயுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X