உங்களுக்கு இந்த இடமாவது நல்ல இடமாக அமையட்டும்.. சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு ஏ.ஆர் ரகுமான் ட்வீட்!
சென்னை : பாலிவுட்டில் முன்னணி நடிகராகர்களில் ஒருவராக வலம் வந்த சுஷாந்த் சிங் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Recommended Video
இந்தநிலையில் பலரும் அவருக்கு ஆதரவாகவும் இதுபோன்று யாரும் வரும் காலங்களில் செய்ய வேண்டாம் என கோரிக்கை வைத்தும் வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமான் போட்ட ட்வீட் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது..

திரையுலகத்திற்கு பெருமை
இசைஞானி இளையராஜாவின் உதவியாளராக இருந்த ஏ ஆர் ரகுமான் இந்திய விருதுகள் மட்டுமில்லாமல் தற்போது ஆஸ்கர் வரை சென்றுள்ளார்.. தமிழ் படங்களை இசையமைக்க ஆரம்பித்த இவர் தற்போது பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று பல படங்களுக்கு பல பாடல்களையும் கொடுத்த இவர் ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்திய திரையுலகத்திற்கு பெருமை சேர்த்தார்.

உருவான ரசிகர்
இவர் இசையமைப்பாளராக ஆரம்பித்த காலத்தில் இவரின் இசை பல்வேறு இசையமைப்பாளர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தி இருந்ததால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் பின் தொடர ஆரம்பித்தனர். அப்படி உருவான ரசிகர் கூட்டம் இன்றுவரை பல கோடி கணக்கில் அதிகமாகி தற்போது உலக அளவில் ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்ற பெயரையும் இவருக்கு பெற்று தந்திருக்கிறது.

தமிழ் படங்களில்
மேலும் பாலிவுட் படங்களில் தொடர்ந்து இசையமைத்து வந்த இவர் தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தமிழில் மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் இவர் இன்னும் வெளிவரவிருக்கும் பல படங்களுக்கு இசையமைத்தும் வருகின்ற நிலையில் தற்போது சுஷாந்த் சிங் மரணத்திற்கு இவர் போட்ட மறைமுக ட்வீட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

நெப்பிடியூசம்
சுஷாந்த் சிங்கின் இந்த நிலைக்கு காரணம் பலரும் பாலிவுட்டில் நடக்கும் நெப்பிடியூசம் தான் என்கின்றனர். அப்படி என்றால் பெரிய நடிகர், நடிகைகள் இயக்குனர்கள் தங்களது குழந்தைகளையும் தங்களது வாரிசுகளை மட்டுமே திரைப்படங்களில் நடிக்க வைப்பார்கள், யாராவது தன்னுடைய சுய முயற்சியால் சினிமாவில் மேலோங்கி வந்தால் அவரை நசுக்கி தூக்கி எறிவார்கள் அப்படித்தான் தற்பொழுது சுஷாந்த் சிங்கின் வாழ்விலும் நடந்தேறியிருக்கிறது என பலரும் கூறி வருகின்றனர்.

நல்ல இடமாக
இந்தக் கொடூரமான நிகழ்விற்கு ஏ ஆர் ரகுமான் தற்பொழுது மறைமுகமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் "உங்களுக்கு இந்த இடமாவது நல்ல இடமாக அமையட்டும்" என நெப்பிடியூசம் செய்து சினிமாவில் ஆட்சி செய்துவரும் பலரையும் மறைமுகமாக மண்ணைக் கவ்வ வைத்துள்ளார்.

மறைமுக ட்வீட்
சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் ஏ ஆர் ரகுமானின் இந்த மறைமுக ட்வீட் பலரையும் சென்றடைந்து தற்போது வைரலாகி வருகிறது. இவர் தனது பேட்டிகள் மற்றும் பாடல்கள் மூலம் பலருக்கும் உந்துசக்தியாக இருக்கும் இவர் நிஜ உலகில் நடக்கும் பல அநீதிகளுக்கும் அவ்வப்போது தனது கண்டனங்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











