twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏஆர் ரஹ்மானையும் அவரது தாயாரையும் தரக்குறைவாக பேசியதா பிரபல பள்ளி? தீயாய் பரவும் வீடியோ!

    |

    சென்னை: இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானையும் அவரது தாயாரையும் பிரபல பள்ளி தரக்குறைவாக பேசியதாக அவரே கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பிரபல இசையமைப்பாளரான ஏஆர் ரஹ்மான் உலகளவில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

    என்னோட அப்பா -அம்மா விவாகரத்து பண்ணிக்கிட்டது எனக்கு சந்தோஷம்தான் -ஸ்ருதிஹாசன் என்னோட அப்பா -அம்மா விவாகரத்து பண்ணிக்கிட்டது எனக்கு சந்தோஷம்தான் -ஸ்ருதிஹாசன்

    திலீப் குமார் என்ற இயற்பெயரை கொண்ட இவர் தனது தந்தை மறைவுக்கு பிறகு இஸ்லாம் மதத்திற்கு மாறினார். அதன்பின் தன்னுடைய பெயரை ஏ.ஆர்.ரஹ்மான் என மாற்றிக் கொண்டார்.

    பல மொழிகளில் பிரபலம்

    பல மொழிகளில் பிரபலம்

    1992ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் ஏஆர் ரஹ்மான். முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்ற ஏஆர் ரஹ்மான், அடுத்தடுத்த தமிழ் மலையாளம், தெலுங்கு என பிஸியானார்.

    125 படங்களுக்கு மேல்

    125 படங்களுக்கு மேல்

    இந்தியில் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான ரங்கீலா படத்திற்கு இசையமைத்ததன் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதித்தார் ஏஆர் ரஹ்மான். இதுவரை 125 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் ஏஆர் ரஹ்மான். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகள் மட்டுமின்றி இங்கிலிஷ் மற்றும் சீன மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார் ஏஆர் ரஹ்மான்.

    ஆஸ்கர் விருது வரை

    ஆஸ்கர் விருது வரை

    தேசிய விருதுகள், பிலிம் பேர் விருதுகள், மாநில அரசுகளின் விருதுகள், பத்ம விருதுகள், ஆஸ்கர், கோல்டன் குளோப், பாஃப்டா, கிராமி விருதுகள், வோர்ல்டு சவுண்ட் ட்ராக் விருதுகள் என பல விருதுகளை குவித்துள்ளார் ஏஆர் ரஹ்மான்.

    கண்களில் வலியுடன்

    இந்நிலையில் ஏஆர் ரஹ்மான் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அதில் பிரபல பள்ளி ஒன்று தன்னையும் தனது தாயையும் தரக்குறைவாக பேசியதை கண்களில் வலியுடனும் உதட்டில் சிரிப்புடனும் பகிர்ந்துள்ளார் ஏஆர் ரஹ்மான்.

    சிமி கார்வாலுடன்..

    சிமி கார்வாலுடன்..

    அதாவது மறைந்த முதல்வர் ஜெயலலிதா உட்பட பல முக்கிய பிரபலங்களை நேர்காணல் செய்தவர் சிமி கார்வால். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு இசைப்புயல் ஏஆர் ரஹ்மானை நேர்காணல் செய்தார்.

    தாயிடம் தரக்குறைவாக

    தாயிடம் தரக்குறைவாக

    அப்போது தான் கஷ்டப்பட்ட காலத்தில் சந்தித்த அவமானங்களை உருக்கமாக பகிர்ந்துகொண்டார் ஏஆர் ரஹ்மான். அதில் தனது தந்தை மறைவுக்கு பிறகு தனது தாயுடன் பள்ளிக்கு சென்றபோது பிரபல பள்ளி தனது தாயிடம் தரக்குறைவாக பேசியதை குறிப்பிட்டுள்ளார்.

    தெரு தெருவா போங்க

    தெரு தெருவா போங்க

    அதாவது, உங்கள் மகனை அழைத்துக்கொண்டு கோடம்பாக்கத்தில் தெரு தெருவாக அலையுங்கள்.. அவர்கள் உங்களுக்கு ஏதாவது பணம் கொடுக்கலாம் என கூறி அவமதித்ததாக கூறியுள்ளனர். ஏஆர் ரஹ்மான் பேசிய இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    சர்ச்சையில் சிக்கிய பள்ளி?

    சர்ச்சையில் சிக்கிய பள்ளி?

    இந்த வீடியோவில் எந்த பள்ளி என்று ஏஆர் ரஹ்மான் கூறவில்லை. ஆனால் அது எந்த பள்ளி என்று தீவிரமாக வலைதளவாசிகள் விவாதித்து வருகின்றனர். பலரும் தற்போது பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ள பிரபல பள்ளியின் பெயரை குறிப்பிட்டு வருகின்றனர்.

    English summary
    AR Rahman video about a school goes viral on social media. A famous School insulted AR Rahman and his mother in his childhood.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X