அஜ்மீர் தர்க்காவிற்கு மனைவியுடன் விசிட் செய்த இசைப்புயல்.. சூப்பர் போட்டோஸ் வெளியிட்டிருக்காரு!

அஜ்மீர் : இசைப்புயல் என்று அனைவராலும் கூறப்படுபவர் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்.

இந்த பட்டத்திற்கு அவர் தகுதியானவர்தான் என்பதை தொடர்ந்து தன்னுடைய படங்களின் பாடல்கள்மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.

கடந்த 30 ஆண்டுகாலமாக திரையுலகில் தன்னை சிறப்பான இசையமைப்பாளராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் இந்த ஆஸ்கர் நாயகன்.

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தமிழில் வெளியான ரோஜா படம் மூலம் சிறப்பான அறிமுகத்தை திரையுலகில் கொடுத்தவர். இந்தப் படத்தின் இசை மிகவும் ப்ரெஷ்ஷாக அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது. புது வெள்ளை மழையையும், அதன் காட்சி அமைப்பையும் அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா.

தமிழுக்கு பெருமை

தமிழுக்கு பெருமை

முன்னதால் பல இசை ஆல்பங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். இவரது இசைக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. ரோஜாவில் துவங்கிய இவரது பயணம் தொடர்ந்து பாலிவுட், ஹாலிவுட் என தொடர்ந்து வருகிறது. ஆஸ்கர் விருதுகளையும் பெற்று தமிழுக்கு இவர் பெருமை சேர்த்துள்ளார். தமிழை ஆஸ்கர் மேடைக்கு கொண்டு சேர்த்தவர் என்ற பெருமையும் ஏஆர் ரஹ்மானுக்கு உள்ளது.

வெற்றிப் பயணம்

வெற்றிப் பயணம்

கடந்த 30 ஆண்டுகளை இவர் திரையுலகில் வெற்றிப் பயணமாக மேற்கொண்டு வருகிறார். ஆனாலும் முதல் படத்தில் பார்த்ததை போலவே தன்னுடைய தோற்றத்தை சிறப்பாக வைத்துள்ளார். இவரையே ஹீரோவாக்கலாம் என்ற விமர்சனங்களையும் பெற்றுள்ளார். ஆனால் ரசிகர்களின் இந்த விருப்பத்தை பல மேடைகளில் இவர் பூர்த்தி செய்துள்ளார்.

அஜ்மீர் தர்காவில் ஏஆர் ரஹ்மான்

அஜ்மீர் தர்காவில் ஏஆர் ரஹ்மான்

ஆனால் இவர் தனது மகளின் திருமணத்தை சமீபத்தில் முடித்துள்ளார். அவ்வளவு வயதா ஆகிவிட்டது ஏஆர் ரஹ்மானுக்கு என்ற விமர்சனத்தை சமீபத்தில் ரசிகர்கள் வெளியிட்டனர். இந்நிலையில் தற்போது தன்னுடைய மனைவியுடன் அஜ்மீர் தர்காவிற்கு சென்றுள்ள ஏஆர் ரஹ்மான், அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சிறப்பான கேப்ஷன்

சிறப்பான கேப்ஷன்

மேலும் கேப்ஷனிலும் சிறப்பான வாசகங்களை பதிவிட்டுள்ளார். இவை அனைவரையும் கவரும் வகையில் காணப்படுகிறது. மேலும் தலைப்பாகையுடன் இந்த புகைப்படங்களில் ஏஆர் ரஹ்மான் காணப்படுகிறார். இந்தப் புகைப்படங்கள் கலர்புல்லாக காணப்படுகின்றன.

சிறப்பான இசையமைப்பு

சிறப்பான இசையமைப்பு

இளம் இசையமைப்பாளராகவே அறிமுகமானார் ஏஆர் ரஹ்மான். ஆனால் இவரது திறமை அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கியது. அந்த வியப்பு தற்போது வரை தொடர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் தன்னை சிறப்பான இசையமைப்பாளராக தொடர்ந்து நிலைநிறுத்தியுள்ளார் இவர். இவருக்கென்று சர்வதேச அளவில் தனி ரசிகர்கள் வட்டம் காணப்படுகிறது.

சிறப்பான வாழ்க்கை

சிறப்பான வாழ்க்கை

ஒரு மனிதரால் இவ்வளவு ஆண்டுகள் தன்னுடைய இசையயால் ரசிகர்களை கட்டிப் போட முடியுமா என்பதற்கு இவர் சிறப்பான உதாரணமாக காணப்படுகிறார். தன்னுடைய கேரியரில் மட்டுமில்லாமல் சொந்த வாழ்க்கையிலும் இவர் சிறப்பான உதாரணமாகவே காணப்படுகிறார். எந்தவிதமான சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்ளாமல் தன்னுடைய வாழ்க்கையை தொடர்ந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X