ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்தை தொடர்ந்து இன்னொரு விவாகரத்து.. Basist மோகினி டேவும் பிரேக்கப்!
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக நேற்று இரவு அறிவித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. என்ன காரணத்திற்காக ஏ.ஆர். ரஹ்மானை பிரிவதாக சாய்ரா பானு முதலில் அறிக்கை வெளியிட்டார் என்றே தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஏ.ஆர். ரஹ்மானே தனது பதிவில் விரைவில் 30வது ஆண்டு திருமண நாளை கொண்டாட இருந்தோம். ஆனால், அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது என பதிவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மானிடம் Basist ஆக வேலை பார்த்து வரும் மோகினி டே தனது கணவர் மார்க்கை பிரிவதாக திடீரென சோஷியல் மீடியாவில் அறிவித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணங்களும் விவாகரத்துகளும்: ஒரு பக்கம் நெப்போலியன் மகனை புரிந்துக் கொண்டு அக்ஷயா தனுஷிடம் உள்ள குறைகளை பார்க்காமல் அவரிடம் உள்ள நிறைகளை பார்த்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த ஆண்டு வரலட்சுமி சரத்குமார், சித்தார்த் - அதிதி ஷங்கர் என பல பிரபலங்கள் திருமணம் செய்துக் கொண்டனர். இன்னொரு பக்கம் ஜி.வி. பிரகாஷ், ஜெயம் ரவி, ஏ.ஆர். ரஹ்மான் என பல பிரபலங்கள் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றனர்.

ஏ.ஆர். ரஹ்மான் - சாய்ரா விவாகரத்து: 29 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் தம்பதிகளாக இருந்து வந்த ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன வலியுடன் தனது கணவரை பிரிவதாகவும் இனிமேல் யார் நினைத்தாலும் இருவரையும் சேர்த்து வைக்க முடியாது என்றும் சாய்ரா பானு தனது சோகத்தை மொத்தமாக கொட்டித் தீர்த்திருந்தார்.

மோகினி டே விவாகரத்து: ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சாய்ரா பானுவின் விவாகரத்து அறிவிப்பு நேற்று இரவு வெளியான நிலையில், மோகினி டேவும் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதல் கணவர் மார்க்கை பிரிவதாக அறிவித்துள்ளார். மும்பையில் பிறந்து வளர்ந்த 28 வயதான இவர் கொல்கத்தாவில் இசைக்குழு ஒன்றை நடத்தி வருகிறார். இந்தியளவில் பல பிரபல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ள இவர் ஏ.ஆர். ரஹ்மான் இசைக்குழுவிலும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சேர்ந்து பணியாற்றுவோம்: இருவரும் ஒரு மனதாக விவாகரத்து செய்து பிரிய முடிவு செய்திருந்தாலும், தொடர்ந்து இசைத்துறையில் ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம் என்பதையும் மோனிகா டே தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் குறிப்பிட்டுள்ளார். மோகினி டே பொதுவெளியில் தனது பிரேக்கப் குறித்து அறிவித்துள்ள நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து செய்தியுடன் இந்த விவகாரமும் அதிகளவில் பரப்பப்பட்டு வருகிறது.



Click it and Unblock the Notifications











