ஏ.ஆர். ரஹ்மான் பாடகி தீயுடன் போட்ட செம டான்ஸ்.. ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை பாடல் ரிலீஸ்!

சென்னை: நடிகர் ஜெயம்ரவி, நித்யா மேனன் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். இநத்ப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் மீது மிகப்பெரிய கவனம் ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது.

வணக்கம் சென்னை படம் மூலம் சினிமாவில் தன்னை இயக்குநராக அறிமுகப்படுத்திக் கொண்ட கிருத்திகா உதயநிதி தொடர்ந்து பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடரை கடந்த ஆண்டில் வெளியிட்டிருந்தார். இந்த தொடரும் அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் அடுத்ததாக ஜெயம்ரவியின் காதலிக்க நேரமில்லை படத்தை இயக்கியுள்ளார்.

jayam ravi kadhalikka neramillai movie ar rahman

காதலிக்க நேரமில்லை படம்: நடிகர் ஜெயம்ரவியின் அடுத்தடுத்த படங்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இருந்த போதிலும் அவரது அடுததடுத்த படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகின்றன.இந்த ஆண்டிலேயே அடுத்தடுத்து அவரது சைரன், பிரதர் படங்கள் வெளியாகி அவரது சொதப்பலாகவே அமைந்தன. இந்நிலையில் அடுத்தடுத்து காதலிக்க நேரமில்லை, ஜெனீ போனற் படங்கள் அவரது நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை படம் ரொமாண்டிக் ஜானரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் முன்னதாக வெளியாகி ரசிக்களை கவர்ந்தது.

பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்: அடுத்தடுத்து அழுத்தமான கதைக்களங்களில் நடித்துவந்த ஜெயம்ரவி நடிப்பில் கடந்த அக்டோபர் 31ம் தேதி ரிலீலான பிரதர் படம் காமெடியை மையமாக வைத்து பேமிலி சென்டிமெண்டை பேசியது. இந்நிலையில் அடுத்ததாக காதலை மையமாக வைத்து காதலிக்க நேரமில்லை படத்தில் ஜெயம்ரவி நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வீடியோ பாடலாக தற்போது பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி மாஸ் காட்டியுள்ளது.

ஏஆர் ரஹ்மான் -தீ டான்ஸ்: இதில் பாடகி தீயுடன் இணைந்து ஏஆர் ரஹ்மானும் ஆட்டம் போட்டுள்ளார். விவேகா இந்தப்பாடலின் வரிகளை எழுதியுள்ள நிலையில், ரஹ்மான் மற்றும் தீ இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளனர். மேலும் நடிகர் ஜெயம்ரவி மற்றும் நித்யா மேனனும் இந்தப் பாடலில் மாஸாக காணப்படுகின்றனர். முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓகே கண்மணி படத்தில் காதலை மையமாக கொண்ட சிறப்பான பாடல்களை ஏஆர் ரஹ்மான் வழங்கியிருந்தார். இந்நிலையில் தற்போது அதே கொண்டாட்டத்துடன் காதலிக்க நேரமில்லை படத்தின் பாடல்களும் மிகச்சிறப்பாக ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளது.

பார்ட்டி கொண்டாட்டம்: பார்ட்டி கொண்டாட்டத்துடன் இந்தப் பாடல் உருவாகியுள்ள நிலையில், பாடலில் ஜெயம்ரவி -நித்யா மேனன் ஜோடி மட்டுமில்லாமல் ஏஆர் ரஹ்மான் -தீ காம்பினேஷனும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் யோகிபாபு, லால், வினய் ராய், ஜான் கொக்கன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். அடுத்தடுத்த படங்களின் தோல்வியால் துவண்டு போயுள்ள ஜெயம் ரவிக்கு இந்தப் படம் சிறப்பான வெற்றியை பெற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X