ஆளப்போறான் தமிழன்.. விஜய்க்கு ஏ.ஆர். ரஹ்மான் கொடுத்த ஹைப்.. அரங்கமே விசில் சத்தத்தில் அதிருதே!
சென்னை: ரஜினிகாந்த் மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு டியூன் போடும் போது என்ன செய்வேன் என்பதை ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் நடைபெற்ற மூன்வாக் நிகழ்ச்சியின் போது பேசியது விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
தளபதி விஜய்க்கு என்னவொரு எலிவேஷன் கொடுத்து ஹைப் ஏற்றிவிட்டார் ஏ.ஆர். ரஹ்மான் என்றும் அவர் சொன்ன உடனே ஒட்டுமொத்த அரங்கமே விசில் அடித்தும் கத்தியும் அரங்கத்தையே அதிரவைத்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் ஜாம்பவான்களாக ரஜினிகாந்த் மற்றும் விஜய் பல பெரிய வசூல் சாதனை ரெக்கார்டுகளை செய்துள்ள நிலையில், அவர்கள் நடிப்பில் வெளியாகும் படங்கள் மற்றும் அந்த படங்களில் இடம்பெறும் பாடல்களும் பலரது கவனத்தை ஈர்ப்பது இயல்பான விஷயம் தான் என்றாலும் அதற்கு பின்னால் இசையமைப்பாளரின் மெனக்கெடலும் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி சாருக்கு வெற்றிக்கொடிகட்டு: ஒரு டாப் நடிகருக்கு மியூசிக் போட வேண்டுமென்றால், அந்த கேரக்டரா நடிச்சு மியூசிக் போடணும் இப்போ பார்த்தீங்கனா ரஜினி சாருக்கு "வெற்றிக் கொடிகட்டு மலைகளை முட்டும் வரை முட்டு" என எலிவேட் செய்யும் பாடலை கொடுக்க வேண்டும் என்று சொன்னதுமே அரங்கமே சந்தோஷமடைந்தது.
ஆளப்போறான் தமிழன்: அடுத்து "ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே" என ஏ.ஆர். ரஹ்மான் பாடியதுமே ஒட்டுமொத்த அரங்கே விசில் அடித்து தளபதி விஜய் என கத்தி அரங்கையே அதிர வைத்தது. ஒவ்வொரு நடிகருக்கும் டியூன் போடும் போது அவங்களோட கேரக்டரைசேஷன் போலவே நடிச்சுத் தான் டியூன் போடணும் என அந்த மேடையில் ஏ.ஆர். ரஹ்மான் பேசியதை தற்போது விஜய் ரசிகர்கள் அதிகம் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
அரசியல் களத்தில் அர்ஜுனர் வில்லு: ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் கில்லி ரீ ரிலீஸ், தெறி ரீ ரிலீஸ் என தொடர்ந்து விஜய்யின் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. அரசியல் களத்தில் அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி அர்ஜுனர் வில்லாக விஜய் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார் என்றும் கண்டிப்பாக அவருக்கு மக்கள் சப்போர்ட் அதிகம் இருப்பதால் தான் திமுக பல எதிரி கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வருகிறது என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications