AR Rahuman: உசுரே நீ தானே.. ஏ.ஆர். ரகுமான் குரலுக்காக ஏங்கும் குழந்தை.. வீடியோ க்யூட்டா இருக்கே!
சென்னை: தனுஷ் இயக்கி நடித்த படம் ராயன். அண்மையில் வெளியான ராயன் படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ரசிகர்களைக் கவர்ந்திருந்தாலும், ஒரு பாடல் மட்டும் அனைவரும் கொண்டாடினர். அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பாடல் என்றால் அது உசுரே நீதானே நீதானே என்ற வரிகள் இடம் பெற்ற பாடல்தான். இந்தப் பாடலில் வரும் உசுரே நீதானே வரிகளுக்காக ஒன்றில் இருந்து இரண்டு வயதே நிரம்பிய குழந்தைக்கு ஏற்படும் பரிதவிப்பு குறித்த வீடியோ இணையத்தில் உலா வருகின்றது. அது குறித்து பார்க்கலாம்.
தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தினை தானே கதை திரைக்கதை அமைத்து இயக்கி நடிக்கவும் செய்தார். ராயன் கடந்த ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ராயன் படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலஷ்மி சரத்குமார், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன்,சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததால், நடிகர் தனுஷ் பிரியாணி விருந்தெல்லாம் கொடுத்து அசத்தினார்.

ராயன் படம், முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகளால் நிரம்பி இருக்கும் பல ஹாலிவுட் படங்களைப் போல் இருக்கின்றது என பலர் கூறினர். படம் முழுவதும் கொலை, வெட்டு, குத்து என இருப்பதால் படத்திற்கு சென்சார் போர்டு நிறுவனம் ஏ சர்டிஃபிகேட் வழங்கியது. படத்தின் முதல் பாதி மற்றும் இடைவேளை காட்சி ஆகியவை ரசிகர்களுக்கு தனுஷ் கொடுத்த பிறந்தநாள் பரிசு என்றே கூறலாம்.

ஆஸ்கர்: படத்தின் திரைக்கதை புத்தகத்தினை ஆஸ்கர் விருதினை வழக்கும் அகாடமி நிறுவனமான அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் நிறுவனத்தில் உள்ள நூலகத்தில் ராயன் படத்தின் திரைக்கதை புத்தகத்தை வைக்க தேர்வாகி ஒட்டுமொத்த படக்குழுவினரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது. ந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இவரது இசையில் இந்தப் படத்தில், மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளது.

வாட்டர் பாக்கெட்: இதில் படம் ரிலீஸ்க்கு முன்னர் படக்குழு தரப்பில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்ட இரண்டாவது பாடல் வாட்டர் பாக்கெட் பாடல். அந்த பாடல் லிரிக் வீடியோவாக ரிலீஸ் ஆனபோதே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் வாட்டர் பாக்கெட் பாடலின் வீடியோ சாங் கடந்த 5ஆம் தேதி யூடியூப்பில் ரிலீஸ் செய்யப்பட்டது. அந்த பாடலை யூடியூப்பில் இதுவரை 24 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

உசுரே நீதானே: அதேபோல் படக்குழு தரப்பில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்ட முதல் பாடலான உசுரே நீ தானே நீ தானே பாடலை அனைவரும் கொண்டாடினர். இணையத்தில் இந்த பாடல்,இந்த பாடல் குறித்த ரீல்ஸ்கள் எல்லாம் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில், இந்தப் பாடலில் வரும் உசுரே நீதானே வரிகளுக்காக ஒன்றில் இருந்து இரண்டு வயதே நிரம்பிய குழந்தைக்கு ஏற்படும் பரிதவிப்பு குறித்த வீடியோ இணையத்தில் உலா வருகின்றது. அந்த வீடியோவில், இந்த பாடல் டீவியில் ஒளிக்கின்றது. உசுரே நீதானே வரிகளுக்கு முன்னர் வரும் சில வரிகளில் இருந்து அந்த வீடியோ தொடங்குகின்றது.
குழந்தை: குழந்தை அடுத்த வரிதான் உசுரே நீதானே வரியோ என நினைத்து ஏமாறுவதும், அருகில் இருப்பவர் அடுத்தவரிதான் உசுரே நீதானே வரி எனக் கூறிய பின்னர் சமாதானம் ஆவதும் என வீடியோ பார்க்கவே க்யூட்டாக உள்ளது. அதேபோல், உசுரே நீதானே வரிகளைக் கேட்டதும் குழந்தை மகிழ்ச்சியில் சிரிப்பதும் அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.


Click it and Unblock the Notifications











