அரபிக்குத்து சர்ச்சை… இருந்தாலும் சிவகார்த்திகேயன் இப்படி பண்ணியிருக்க கூடாது ?

சென்னை : பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக்குத்து பாடல் குறித்த சர்ச்சை இணையத்தில் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

நெல்சன் திலீக்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே,யோகிபாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் நடிப்பில் வெளியானத் திரைப்படம் பீஸ்ட்.

இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தன.

பீஸ்ட்

பீஸ்ட்

பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஹலமிதி ஹபிபோ... ஹலமிதி ஹபிபோ' பாடல் படம் வெளியாவதற்கு முன்பே வெளியாகி டிராண்டானது. இந்த பாடலை அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி ஆகியோர் இணைந்து பாடி இருந்தார். இவர்கள் இருவரும் ஏற்கனவே டாக்டர் திரைப்படத்திற்கு இணைந்து செல்லம்மா செல்லம்மா பாடலை பாடி இருந்தனர். அந்த பாடல் வெற்றி பெற்ற நிலையில் அரபிக்குத்து பாடலையும் பாடி இருந்தனர். அரபிக்குத்து பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரியை எழுதி இருந்தார்.

ரசித்து கேட்டனர்

ரசித்து கேட்டனர்

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் என்று எந்த சோஷியல் மீடியா பக்கம் போனாலும் ஹலமிதி ஹபிபோனு தான் எல்லோரும் பாட்டுப்பாடி, டான்ஸ் ஆடி எஞ்சாய் பண்ணி பாடலைக் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த பாடலை கேட்கும் போடு தானாக தாளம் போட்டு கால் ஆட்டம்போடத் தொடங்கி விடுகிறது. இந்த பாடல் காப்பி என்ற சர்ச்சை எழுத போதும் ரசிகர்கள் இந்த பாடலை ரசித்து கேட்டு வருகின்றனர்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இந்நிலையில், அரபிக்குத்து பாடல் அனிருத் எழுதிய பாடல் என்று வெளியாகி உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில், அனிருத் அரபி வார்த்தைகளை எல்லாம் சேர்த்து ஃபுல்லா பாட்டு அமைத்து எனக்கு அனுப்பியிருந்தார். அதில் நான் சில வார்த்தைகளை மட்டும் நீக்கி தமிழ் வார்த்தைகளை சேர்த்துள்ளேன் எனவும் கூறியுள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன சிவகார்த்திகேயன் இதெல்லாம்

என்ன சிவகார்த்திகேயன் இதெல்லாம்

அரபிக்குத்து பாடலை சிவகார்த்திகேயன் தான் எழுதினார் என்று படக்குழு ப்ரோமோ வெளியிட்டுவிட்டு, படம் வெளியாகி இத்தனை நாட்கள் ஆன நிலையில் தற்போதுதான் சிவகார்த்திகேயன் இந்த தகவலை கூறியுள்ளார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள், என்ன இருந்தாலும் சிவகார்த்திகேயன் இப்படி பண்ணியிருக்க கூடாது ? முன்பே சொல்லி இருக்கலாம் என்று கமெண்ட்டுகளில் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X