எதற்கும் துணிந்தவன் படத்தில் அரபிக்குத்தா... வேற லெவலில் கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை : எதற்கும் துணிந்தவன் படத்திற்கு இடையே அரபிக்குத்து பாடல் வருவதையும் ரசிகர்கள் வேற லெவலில் ஆட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர். சூர்யா படத்தில் அரபிக்குத்து வருவது ஆச்சரியத்தை தந்தாலும், இது புது அனுபவமாக உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Recommended Video
சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படம் உலகம் முழுவதும் இன்று தியேட்டரில் ரிலீசாகி உள்ளது. மூன்று வருடங்களுக்கு பிறகு தியேட்டரில் ரிலீசாகும் சூர்யா படம் என்பதாலும், வித்தியாசமான கேரக்டரில் சூர்யா நடத்திருப்பதாலும் இந்த படம் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரசிகர்களை கவர்ந்த எதற்கும் துணிந்தவன்
பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் ஃபஸ்ட் டே ஃபஸ்ட் ஷோ அதிகாலை 5 மணிக்கு திரையிடப்பட்டது. இந்த படம் அனைத்து தரப்பிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எதிர்பார்த்ததை விட சிறப்பான விமர்சனங்களை இந்த படம் பெற்றுள்ளது. குடும்ப ரசிகர்களை இந்த படம் அதிகம் கவர்ந்துள்ளது. ஃபஸ்ட் ஆஃப் முழுக்க முழுக்க என்டர்டைன்மென்ட் படமாகவும், செகண்ட் ஆஃப் அழுத்தமான மெசேஜ் சொல்வதாகவும் உள்ளது.

எதற்கும் துணிந்தவனில் அரபிக்குத்து
மொத்தம் இரண்டரை மணி நேரம் ஓடும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ஃபஸ்ட் ஆஃப் ஒரு மணி நேரம் 15 நிமிடம் 9 விநாடிகள் ஓடுகிறது. இது முடிந்ததும் இன்டர்வெலின் போது விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட்டு, சாதனை படைத்து வரும் அரபிக்குத்து பாடல் திரையிடப்படுகிறது. சூர்யா படத்தில் அரபிக்குத்து பாடல் திரையிடப்படுவது பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும் படத்தையும் தாண்டி, அரபிக்குத்து பாடலை ரசிகர்கள் ரசித்து கொண்டாடி வருகின்றனர்.

என்னது இத்தனை பார்வைகளா
விஜய்யின் பீஸ்ட் படத்திற்காக சிவகார்த்திகேயன் வரிகளில், அனிருத் இசையமைத்து பாடி உள்ள அரபிக்குத்து பாடல் காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது. இந்த பாடல் யூட்யூப்பில் தற்போது வரை 150 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. உலக அளவில் மிக குறுகிய காலத்தில் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட பாடல்களின் பட்டியலில் அரபிக்குத்து பாடலும் இடம்பிடித்துள்ளது.

பீஸ்ட்டுக்கு தயாராகும் ரசிகர்கள்
அரபிக்குத்து பாடல் தந்த உற்சாகம், ரசிகர்கள் அளித்துள்ள வரவேற்பு படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வரும், படத்தின் ரிலீஸ் தேதி என்ன என அனைவரையும் கேட்க வைத்துள்ளது. இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தில் அரபிக்குத்து பாடல் திரையிடப்படுவதால் பீஸ்ட் படம், மிக விரைவில் ரிலீசாக உள்ளது உறுதியாகி விட்டதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











