அடிதூள்... செம குத்தாக வெளியான பீஸ்ட் அரபிக் குத்து...வேற லெவலில் கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை : அட்டகாசமான பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள் அரபிக்குத்து பாடலை சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. செம மாஸ் குத்தாக வெளியிடப்பட்டுள்ள இந்த பாடலை விஜய் ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராகவன், கிங்ஸ்லே உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் 14 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பீஸ்ட் படத்தின் ஷுட்டிங் முடிந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. அனிருத் இசை அமைத்துள்ளார்.

காதலர் தினத்தில் அரபிக்குத்து
இந்நிலையில் பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிளாக அரபிக்குத்து பாடல், காதலர் தின ட்ரீட்டாக பிப்ரவரி 14 ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ப்ரோமோ கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில் அனிருத், நெல்சன், சிவகார்த்திகேயன் இருப்பது போலவும், விஜய் போனில் பேசுவது போலவும் அமைக்கப்பட்டிருந்தது.

அரபிக்குத்து போஸ்டர்
சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக்குத்து பாடலை விஜய் பாட உள்ளதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அரபிக்குத்து பாடலை அனிருத் தான் பாடி உள்ளதாகவும் அவருடன் சேர்ந்து டாக்டர் படத்தில் செல்லம்மா பாடலை பாடிய ஜோடிக் காந்தி பாடி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அரபிக்குத்து பாடலுக்கான போஸ்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டது.

காத்திருந்த ரசிகர்கள்
அரபிக்குத்து பற்றிய அடுத்தடுத்த தகவல்கள் வெளியானதால், பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். அரபிக்குத்து ப்ரோமோ வெளியானதில் இருந்தே ArabicKuthu ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆக்கப்பட்டது. நேற்று முதலே Beast ஹேஷ்டேக் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இன்று அரபிக்குத்து டே
இந்நிலையில் இன்று காலை முதல் ArabicKuthuFromToday என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்தது. இதில் விஜய் ரசிகர்கள், Today Valentine's day என்பதை அடித்து விட்டு, ArabicKuthu day என அதிக அளவில் பகிர்ந்தனர். விஜய்யின் மாஸ்டர் பட ஃபஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடலும் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. ஆனால் அதை மிஞ்சும் அளவிற்கு அரபிக்குத்து வேற லெவலில் இருக்கும் என கூறப்பட்டது.
வேற லெவலில் இறங்கி குத்திய அரபிக்குத்து
ரசிகர்கள் எதிர்பார்ப்பை மிஞ்சும் அளவிற்கு வேற லெவலில் இறங்கி குத்துவதாக அரபிக் குத்து பாடல் அமைந்துள்ளது. ஹலமதி ஹபிப்போ என துவங்கும் இந்த பாடலின் மேக்கிங் வீடியோவுடன் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. க்யூட்டி, ஸ்வீட்டி என வரும் இந்த பாடலை அனிருத் மற்றும் ஜோடிக் காந்தி பாடி உள்ளனர். பூஜா ஹெக்டேவுடன் இணைந்து செம மாஸாக நடனமாடி ரசிகர்களை அசத்தி உள்ளார் விஜய்.

டிரெண்டிங்னா இப்படி இருக்கனும்
பீஸ்ட் அரபிக்குத்து லிரிக்கல் வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அடுத்த நிமிடமே 24,000 பார்வைகளை இந்த வீடியோ பெற்றுள்ளது. இதே போல் ட்விட்டர் டிரெண்டிலும் ArabicKuthu, BeastFirstSingle,HalamathiHabibo ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆகின.


Click it and Unblock the Notifications