இன்று வரை அறத்தை மீட்டெடுக்க முடியவில்லை- பொதுமக்களும் அரசாங்கமும் வருத்தம்.

சென்னை : அறம் படம் 2017 நவம்பரில் வெளியானது .நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இந்த படத்தை இயக்கி இருந்தார் அறிமுக இயக்குனரான கோபி நயினார் .

இந்த படத்தின் கதை சரியான கவனிப்புடன் மூட வேண்டிய ஆழ்துளை கினற்றை மூடாமல் இருந்த அலட்சியம் காரணமாக ஒரு குழந்தை தவறி விழுந்து விடும் ,அந்த குழந்தையை எப்படி காப்பாற்றினார்கள் என்பதே படத்தின் கதை . தமிழகத்தில் இந்த படத்தில் வருவதை போல பல உண்மை சம்பவங்கள் இன்று வரை நடந்து கொண்டுதான் இருக்கிறது ,நேற்று திருச்சி அருகே சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பறிதவித்து கொண்டிருக்கும் விசயம் மிக மோசமானது . இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது அந்த எளிய மக்கள் இதற்கு ஒரு தீர்வு கிடைக்காதா என்று ஏங்கி கடுமையாக கோபப்படுவார்கள் . அந்த கோபத்தின் வெளிப்பாடகவே அறம் படத்தை எடுத்திருப்பார் இயக்குனர் கோபி நயினார்.

Aram movie one of the best example for current scenario of sujith.

படத்தில் அந்த குழந்தையை காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கும் மாவட்ட ஆட்சியாளராக நயன்தாரா நடித்திருப்பார். நயன்தாரா தனி ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்த பிறகு அவரை மாஸ் ஹீரோயினாக மாற்றியது இந்த படம் தான் .இந்த படத்தில் பதற்றமும் அதே நேரத்தில் துனிச்சலும் கொண்டு செயல் படும் ஆட்சியாளராக நயன்தாரா நடித்திருப்பார் . படத்தின் முக்கிய கதைகரு விஞ்ஞானம் எவ்வளவு பெரிய செயல்களையும் செய்கிறது ஆனால் இந்த ஏழை மக்களுக்கு மட்டும் எவ்விதத்திலும் உதவ மறுக்கிறது, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற முழுமையாய் ஒரு கருவி கூட இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கோபம் மக்களிடையே இருக்கும் அதையே படத்தில் வெளிப்படுத்தி இருப்பார்கள் .

தற்போது சுஜித் எனும் சிறுவன் ஆழ்துளை கிணற்றில் சிக்கி தவிக்க ,அவனை காப்பாற்ற மீட்புத்துறை போராடி வருகிறது. மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தான் கண்டு பிடித்த கருவியை வைத்து இதற்கு முன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை ஒன்றை காப்பாற்றி உள்ளார்,அவரும் சம்பவ இடத்திற்கு அழைத்து வர பட்டார். ஆனால் அவரால் சுஜித்தை மீட்டெடுக்க முடியவில்லை.

Aram movie one of the best example for current scenario of sujith.

பல ஆண்டுகாளமாக இப்படிபட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் வருகிறது ஆனால் இதற்கான சரியான விழிப்புணர்வு இங்கு ஏற்படுத்தி எந்தவித மாற்றத்தையும் அரசு ஏற்படத்தவில்லை என்பதற்கு சுஜித் நிலைமையே எடுத்து காட்டு .இதை சுட்டி காட்ட அறம் போன்ற படங்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது. இதை இனிமேல் சரி செய்வார்கள் என்று நம்புவோம்.

ஜீ.வி.பிரகாஷ்,சேரன்,கஸ்தூரி,விவேக் போன்ற பலரும் சுஜித்தை காப்பாற்ற வேண்டும் என்று டீவிட்டரில் கூறியுள்ளனர் மற்றும் சேவ் சுஜித் என்று ஹாஸ்டேக்கையும் கிரீயேட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X